உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

231

அழகனார்”, அழகமதியர்”, அருட்செல்வர்", ", ஆமலையழகர்32, மதியழகர் மணவழகர், அருளர்35, மனங்கவர்ந்தார்36 சின்னாண்டார்" மகிழ்நர்” இன்ன பெயராளர்களிடத்தெல்லாம் பேராளராகப் பாவாணர் திருக்கோலம் கொண்டுள்ளார்.

வெங்காலூர்", வேம்பாய், எருதந்துறை, பைந்தீவர்2, அமைதிவாரி என்று எண்ணுவாரிடத்தும், வேம்பா (கொதிகலன்) தொழிற்சாலை", தடிவழிவிரைவான், நாட்சரி", மாதிகை என்று பெயரிடுவாரிடததும் பாவாணர் அமைந்திருக்கிறார்.

48

47

காட்டு விலங்காண்டி என்றாலும் பட்டந்தாங்கி" என்றாலும் நேரியைப் பயன்படுத்தும் அளவில் மொழியாக்க நோக்குக் கொள்ளுதல் வேண்டும் என்று கருதின், அவரிடத்தே பாவாணர் அகமலர்ந்து முகமலர்ந்து அழகுக் காட்சி வழங்குகின்றார்.

இங்குச் சுட்டிக்காட்டிய ஐம்பது சொற்கள் தாமோ தேவநேயம். இப்படி எத்தனை எத்தனை ஐம்பதுகள். இவற்றைத் தொகுத்துத் தொகைப்படுத்துவதே நேவநேயம். இத்தேவநேயம் இயன்ற விரைவில் வெளிப்படுமாக.

குறிப்பு விளக்கம் :

1. டாக்டர், 2. மருத்துவர், 3. காபி, 4. தேநீர், 5. தயார், 6. வசதி, 7. ஸ்டூல்,8.மேசை, 9. புரூட் சாலிட், 10. ஐஸ்கிரீம், 11. திருப்தி, 12. விரைவு, 13. சாதகம், 14. பஞ்சாங்கம், 15. புராணம் 16. அவதாரம் 17. புதன் 18. சனி. 19. ஏர்கண்டிசன் 20. பேனா, 21. பாகவதர், 22. சமுதாயம், 23 எடுப்புக் கக்கூஸ், 24. பிளஸ்அவுட், 25. இரத்தம், 26. பர்லாங், 27. புனல், 28. மணிப்பிரவாளம், 30. இராமச்சந்திரன், 31.கருணாநிதி, 32. பசுமலைசுந்தரம், 33. சோமசுந்தரம், 34. கலியாணசுந்தரம், 35. பசுமலைசுந்தரம், 36. மனோகரன், 37. சின்னச்சாமி, 38. சந்தோஷம், 39. பெங்களூர் 40. பம்பாய், 41 ஆக்சுசுப்போர்டு, 42. கிருன்லாண்ட், 43. பசிபிக்குக்கடல், 44. பாய்லர்தொழிற்சாலை, 45. சிரேட்டிரங் எக்ஸ்பிர;ஸ் 46. தினசரி, 47. மாதப்பத்திரிகை, 48. திருகாண்டி (மிராண்டி) 49. பட்டதாரி, 50.ஓட்டு.

தேநேயப் பாவாணரின் சொல்லாய்வுகள் என்னும் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனப் பாவாணர் அறக்கட்டளைப் பொழிவு நூலின் இறுதிக்கட்டுரையைப் பெரிதும் தழுவியது இப்பகுதி.