உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

-

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

காட்டக்கூடிய சொற்கள் ஒருபதா? இருபதா? தனித்துத் தொகுத்து அடைவு செய்யின் ஒருதனி நூலாம் தகையது. பாவாணராக வாழ்ந்து கொண்டிருக்கும் சொல்வாழ்வுகள்! 'பண்டாரகரா' 'பண்டுவரா" பாவாணரை நினைவு கூராமல் முடியுமா? 'குளம்பி" வேண்டுமா? 'கொழுந்துநீர் " வேண்டுமா? என்று வினவுவாரிடைப் பாவாணர் அன்றோ மென்னகை புரிகிறார்.

5

நான் அணியமாக இருந்தேன். நீங்கள் இப்பொழுது வந்தது ஏந்தாக வாய்த்தது என்பாரிடைப் பாவாணர் இரண்டறக் கலந்து நிற்கிறார்.

8

இந்த மொட்டான்' தான் அந்த மேடைக்கு அமைவாக இருக்கும் என்பவர் இன்றமிழ் உள்ளத்தில் பாவாணர் அல்லரோ வீற்றிருக்கிறார்.

பழக்கூட்டும்' பனிக்கூழும்" எனக்கு ஒத்துக் கொள்வ தில்லை; வெதுப்பாகப் பருகவேண்டும் என் பாரிடத்துப் பழக்கூட்டும் பனிக்கூழுமாகப் பாவாணர் குளிர்கிறார்.

பொந்திகை"யாக உண்டு, சடுத்தமாக வருவாருடனே பாவாணரும் அகமிக்க பொந்திகையாக வருகின்றார்.

பிறப்பியம் எழுதி ஐந்திறம்" அறிவாரிடத்தும், தொன்மம்'S படித்துத் தோற்றரவை" நம்பு வாரிடத்தும் கூடத் தமிழால் ஒன்றிவிடுகிறார் பாவாணர்.

18

அறிவன்" காரி'8 பார்த்து

நீராடுவாரிடத்தும்

செந்தணப்பில்' வீற்றிருப்பார் இடத்தும் பாவாணர் இனிதின் உறைகின்றார்.

தூவல் கொண்டு எழுதுவாரிடத்தும் பாடகராகிப் பாடுவாரிடத்தும் பாவாணர் ஒன்றியுள்ளார்.

22

23

குமுகாய மேம்பாட்டுக்கு எடுப்பை அகற்றி அடிப்பைப் பயன்படுத்த வேண்டும் என்று சூளிட்டுக் கொள்வாரிடத்தே பாவாணர் சுடர்கின்றார்.

அரத்தம் 25, படைச்சால், வைத்தூற்றி”, மணிப்பவழம்28 இன்னவற்றை அகரமுதலியில் இணைப்பாரிடத்தே பாவாணர் இணைகின்றார்.