உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

229

அவர், வேர் கண்ட சொற்களுக்கு வேர், விளக்கங்கண்ட சொற்களுக்கு விளக்கம், ஒப்புமை கண்ட சொற்களுக்கு ஒப்புமைப், பொருள் மட்டும் கூறிய சொற்களுக்குப் பொருள், சொல்லை மட்டும் சுட்டின் அச்சொல், ஆங்கிலம் முதலிய பிறமொழி விளக்கம் உண்டாயின் அவ்விளக்கம் ஆகிய அனைத்தையும் தொகுப்புப் பொருளாக்கிவிட வேண்டும்.

வடமொழியைத் தென்மொழியாக்கம் ஆக்கிய தாயினும்சரி, ஆங்கிலத்தைத் தமிழாக்கம் செய்த தாயினும் சரி, புதிது படைத்த கலைச் சொல்லாயினும் சரி, பழஞ்சொல்லைப் புதுப்பொருளில் புதுக்கிக் கொண்டதாயினும் சரி, அவ்வகர நிரலில் விடுபாடின்றி ணைத்துவிடவேண்டும்.

இவ்வாறு அமைக்கப்பட்டுவிடுமானால் சொற் பொருளாய்வாளருக்கும், கலைச் சொல்லாக்கம் புரிய விரும்பு வார்க்கும், சொல்லியல் நெறிமுறை வகுக்க விழைவார்க்கும், பாவாணர் பழுத்த புலமை நலம் திரட்டாகக் கண்டு திளைக்க முனைவார்க்கும் தேடி வைத்த திருவாகித் திகழ்தல் உறுதியாம்.

"மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர், தம் புகழ் நிறீஇத் தாம்' அமைந்தனர். தம்புகழாவது தம் புகழை நிலைபெறச் செய்யும் செயற்பாடுகள்! செயற்பாட்டின் உலாச்சான்று மொழி சொல்- தானே!

திருவாசகம் இன்றில்லையேல் சாழல் தெள்ளேணம் முதலிய சொற்களை வேறெங்குக் காண முடியும் என ஏங்குபவர் பாவாணர் (சொல். கட். பக். 89).

ஆயிரம் ஆயிரம் சொற்களை மணிவாசகர் தம் நூலில் வைப்பாக்கியிருந்தாலும் சாழலும் தெள்ளேணமும் தனித் துயர்ந்து தலைதூக்கி நிற்பானேன்? அவ்வாட்சி பிறரிடத்துக் காணற்கில்லாப் பெற்றியதாகலின் என்க. பத்தோடு பதினொன்று என்று இல்லாமல் அவருக்கே உரிமைபூண்ட ஆட்சிச் சொற்கள் அவை ஆகலான் மணிவாசகர்க்குத் தனிவீறும் தனிப்பேறும் நல்கின. இந்நல்குதலை நோக்கிய பாவாணர் நோக்கே, சிலம்பு, மேகலை, சிந்தாமணி, பெருங்கதை நோக்கிய வனப்பு நூல்களுக்கே உரிய சொற்களைத் தனித்தனியே தொகுத்து 'வனப்புச்சொல் வளம்' எழுதத் தூண்டிற்று (செந்.செல். 39: 305-310). இவ்வகையில் பாவணர்க்கே உரிய -பாவாணரை அடையாளம்