உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

கட்டுரை வரைவியல் என்னும்

இடைதரக் கட்டுரை இலக்கணம்

கழக வெளியீடு : 400

சேலம் கல்லூரித் திணைக்களத்தலைவன்

237

பண்டித புலவ வித்துவான் ஞா. தேவநேயன் (B.O.L.)

எழுதியது.

முதற்பதிப்பு: சூன் 1939, நான்காம் பதிப்பு.

நவம்பர் 1952.

(மூன்றாம் பதிப்பின் முகவுரை: ஞா. தே; மண்ணடி, சென்னை 20-1-1944. "பல திருத்தங்களும் பல புதுச் சேர்க்கைகளும் நிகழ்ந்துள்ளன" என்கிறார். எழுத்தியல், சொல்லியல், சொற் றொடரியல், அணியியல், கட்டுரையியல் என்னும் ஐந்தியல்களும் நான்கு பின்னிணைப்புகளும் கொண்டது. பக். 160. உரிமை, கழகம்) கிறித்தவக் கீர்த்தனம்

இந்நூலின் இரண்டு அட்டைகளும் கிட்டவில்லை: நூற்பொருளுக்கு முற்பட்ட பக்கங்களும் கிட்டவில்லை. எனவே இது முதலில் எப்பொழுது பதிப்பிக்கப்பட்டது என்பது தெரியாத நிலை என நூல்நிலையப் பிற்பதிப்பாம் வேதாகம மாணவர் பதிப்புக் கூறுகின்றது. (1981).

நல்ல தமிழ் மொழியில் பைபிளை மொழியாக்கம் செய்வதற்கு அவர் மேற்கொண்ட முயற்சியில் அவ்வளவு வரவேற்பும் வாய்ப்பும் காணா நிலையில் தம் மனத்தைத் தமிழ்மொழி இலக்கிய ஆராய்ச்சியில் ஈடுபடுத்தியதைப் பாவாணர் தம்மிடம் நேரில் உரைத்ததாகப் பதிப்பாசிரியர் ஞானசிகாமணியார் குறிப்பிடுகிறார் (1969).

இயற்பாக்கள் 25-உம், இசைப்பாக்கள் 50-உம் கொண்ட சுவடி இது. சிலப்பதிகார வரிப்பாடல்கள் தேவாரப்பண், திருப்புகழ் வண்ணம், திருவருட்பா அமைதி இன்னவெல்லாம் இசைக் கீர்த்தனங்களுடன் இடம் பெற்றுள.