உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

சிறுவர் பாடல் திரட்டு

இந்திய கிறித்தவ இலக்கியக் கழகத்தால் 1925-இல் வெளியிடப்பட்டது இந்நூல். இதன் முகவுரையில் 'ஞான். தேவநேசப் பாவாணன், திருவல்லிக்கேணி, 26-8-24' என்றுள்ள குறிப்புகள் பெயர், இடம், நான் தெரிவிக்கும்.

பொருட் பாடம், கதை, விளையாட்டு, கைவேலை முதலியவை மேல் 29 பாடல்களைக் கொண்ட இந்நூலின், ஒவ்வொரு பாட்டுக்கு மேலும் மெட்டுக் குறிக்கப்பட்டுள்ளது.

"வெளிவந்த சிறுவர் பாடல் நூல்கள் கருத்தில்லாமல் குருட்டுப் பாடங்களாக இருக்கின்றமையால் இந்நூல் வந்தது" என்கிறார் பாவாணர்.

(C

'இசைப்பித்தனாக

இருந்த என்னை இறைவன் மாற்றினான்" என்று பிற்காலத்துக் கூறுதற்கு அமைந்த முற்பட்ட இசைச்சான்று இந்நூல் எனத்தகும். 'G.L.S, Press, Madras - 1925' என்பது அச்சீட்டுக்குறிப்பு. நூல் 32 பக்கங்களால் ஆயது. இதன் ஒளிப்படி யொன்றை உதவியவர் பேரா. திருமாறனார்.

சுட்டு விளக்கம் அல்லது அடிப்படைவேர்ச்சொல் ஐந்து

சென்னை, முத்தியாலுபேட்டை உயர்நிலைப்பள்ளித் தமிழாசிரியன் பண்டித புலவ வித்துவ கீழ்கலைத் தேர்ச்சியாளன் ஞா.தேவநேயன், B.O.L. எழுதியது.

1943

(ஒப்பியன் மொழிநூல்: முதன்மடலம் - 2-ம் பாகம் முற்பகுதி என்னும் குறிப்பில் உள்ளது. ஆசிரியர் சொந்த வெளியீடு. நூல் கிடைக்குமிடம் கழகம் முகவுரை 6 பக்கம். ஞா. தேவநேயன். இடமும் நாளும் இல்லை. "எனது மொழியாராய்ச்சி குன்றாவாறு இடை இடை ஊக்கிவரும் என் நண்பர் திருமான் வ. சுப்பையா பிள்ளை அவர்கட்கும் பிறர்க்கும் யான் மிகமிகக் கடப் பாடுடையேன்" என்றும், 'இவ்வாராய்ச்சிக்கும் அதன் வெளி யீட்டிற்கும் தோன்றாத் துணையாய் இருந்து உதவியருளும் எல்லாம் வல்ல இறைவன் திருவடிகளை நெஞ்சார நினைத்துத் தலையார் வணங்குகின்றேன்" என்றும் முகவுரையை நிறைத்துள்ளார். சுட்டு,