உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

சுட்டுத்தோற்றம், சுட்டுவேர்ச்சொற்கள்,

239

மூவிடப்பெயர்,

வினாப்பெயர் என்னும் ஐம்பகுப்பும் மூன்று பின்னிணைப்பும்

கொண்ட இந்நூல் 104 பக்கங்களுடையது).

சென்னைப் பல்கலைக் கழகத் தமிழகராதியின் சீர்கேடு

மதுரைப் பண்டிதன், நெல்லைப்புலவன், சென்னைப் புலவ (வித்துவ) கலைத்தலைவன் (M.A), ஓய்வு பெற்ற சேலம் நகராண்மைக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியன் ஞா. தேவநேயன் எழுதியது.

1961

விலை 75 புதுச்சல்லி.

(முகவுரை மூன்றுபக்கம். சொல்வழுக்கள், பொருள் வழுக்கள், வேர்வழுக்கள், இலக்கணவழுக்கள், மரபு வழுக்கள், அகராதி அமைப்புவழுக்கள், அகராதி ஆசிரியர் குறைகள், சென்னைப் பல்கலைக் கழக அமைப்புக் குறைகள் என்னும் எண் பகுப்பினது நூல். புதுவை, 20-8-1961. ஞா.தே. என முகவுரை நிறைவில்உள்ளது.

‘புக்கில் அமைந்தினறு கொல்லோ சிலரிடைத்

துச்சில் இருந்த தமிழ்க்கு'

எனக் குறள் மாற்றுவடிவொன்று முகவுரையில் உள்ளது. 46 பக்கங்கள். நூல்நிறைவில், “அகராதியை உடனே திருத்தாவிடின், தமிழுக்கென்று தனிப்பல்கலைக் கழகமே நிறுவப்பெறுதல் வேண்டும்" என்று முடிக்கிறார்.

சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்

கழக வெளியீடு: 484

முதற்பதிப்பு 1949,

முன்னாள் சேலம் நகராண்மைக் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் பண்டித புலவர் ஞா.தேவநேயன் எம்.ஏ., பி.ஓ.எல்.

உரிமை : நேசமணி தேவநேசன்.