உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

(முகவுரை ஒரே பக்கம் : இடம் நாள் பெயர்: சேலம்; 29-12- 48; ஞா.தே. என்னைப் பல்லாற்றானும் ஊக்கி இந்நூல் விரைந்து இயல்வதற்குக் காரணமாயிருந்த சேலம் நகராண்மைக் கல்லூரித் தலைவர் திரு.அ. இராமசாமிக் கவுண்டர் M.A. L.T., அவர்களுக்கு யான் என்றுங் கடப்படுடடையேன்" என்கிறார். அணியியற் சொற்கள் முதலாகச் சொற் குடும்பமும் குலமும் ஈறாக 120 பக்கங்களைக் கொண்டது.

தமிழ் இலக்கிய வரலாறு

மேனாள் சேலம் நகராட்சிக் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவன் ஞா. தேவநேயன் எழுதியது.

நேசமணி பதிப்பக வெளியீடு; முதற்பதிப்பு 25, சூலை 1979. உரிமை : ஞானமுத்து தேவநேயன்

அச்சகம் : காட்டுப்பாடி தென்குமரி அச்சகம்.

நூலுதவி : வெ.கோபல கிருட்டிணனார் சிங்கப்பூர்.

(நன்றியுரை, பாடாண்பதிகம், நூலாசிரியன் முகவுரை, பதிப்பாளன் முகவுரை (தே.மணி) தமிழாரியப் போராட்டப் பட்டிமன்ற நடுவர் பெயர்ப் பட்டி ஆகியவற்றுடன் முன்னுரை 65 பக்கமும், நூல் தலைக் காலம் இடைக்காலம் இக்காலம் எதிர்காலம் பின்னிணைப்பு ஆகியன 326 பக்கங்களும் கொண்டது. வ.உ.சி.கப்பலோட்டியதைத் தடுத்தது ஆங்கிலராட்சியால் விளைந்த சிறுதீங்கே. ஆயின் முதன் முதல் கலம்புணர்த்து ஓட்டியவன் தமிழன் என்பதை மறைத்து நாவாய் என்னும் கலப்பெயரையும் தமிழ் என வழங்கவிடாது நௌ என்னும் சொற்றிரிபெனத் தடுப்பதே பிரித்தானியச் செயலினும் கொடிது" என்கிறார் (299)

கழக

தமிழ் நாட்டு விளையாட்டுக்கள்

வெளியீடு: 752

முதற்பதிப்பு திசம்பர் 1954.

ஆசிரியர்

சேலங் கல்லூரித் தலைமைத் தமிழாசிரியர்