உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தரின் மதிப்பீடு

பாவாணர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணி செய்த காலம்; பாவேந்தர் ஒருமுறை அங்கு வந்தார். பாவாணர் இல்லஞ்சென்று காணவிரும்பினார். உடனிருந்த மெய்யப் பானர், "நீங்கள் போய்ப் பாவாணரைப் பார்க்க வேண்டுமா?" என வினாவினார். “ஆம்! அவர் தாமே நமக்கெல்லாம் ஊற்றம்; அதைத் தானே நான் பாடுகின்றேன்" என்றாராம்! பாவேந்தர் மதிப்பீடு எத்தகு பாராட்டுக்குரியது! இதனைக் கூறியவர் பேரா. மெய்யப்பனார்.