உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

பொறாமை அல்லது தன்னினப்பகைமை 4. குறிபார்த்தல் 5. துறவியைப் பின்பற்றல் 6. ஆரியம் 7. அரசியற் கட்சிகள் என்னும் தலைப்புகளில் அமைந்த கட்டுரைகள்.

-இக்குறிப்புகள் பேரா. திருமாறனார் வழங்கியவை.

பாவாணர் நூல்களைப் பற்றிய சிலகுறிப்புகள்

தமிழ்மொழியில் சொற்கள் முச்சுட்டிலும் அவற்றுள்ளும் ஊகாரச் சுட்டொடு கலந்த மொழி முதல்மெய்களிலும் தோன்றின என்னும் புத்தம் புதிய புதையற் கண்டுபிடிப்பை வெளியிட்ட நூல் - முதல் தாய் மொழி.

மற்றைத் தமிழறிஞரல்லாதாரும் வடசொல்லே என்று வரிந்து விட்ட 713 சொற்களை எடுத்து வேர் நிலையில்ஆய்ந்து அருந்தமிழ்ச் சொல்லாதலை எண்பிக்கும் - வடமொழி வரலாறு.

மலைஞாலம் கன்னடம் தெலுங்கு முதலிய மும் மொழிகளில் முழங்கும் சொல்தமிழினின்று கிளைத் தவை என உறுதிப்பாப் பாடும் நூல்-திரவிடத்தாய்.

மொழியியல் அறிஞர் ஏன் அரசியல் பற்றிக் கருத்தெழுதப் போகிறார் என்று முன்னம் சொல்லும் போதெல்லாம் எண்ணிய எண்ணம் மண்ணாக விண்ணாக

உலக

உயர்வதுபோல்

மண்ணில்விண்

அரசியலினைப் பிழிந்து தரும் அரும்நூல்

அல்லது வள்ளுவர் கூட்டுடமை.

-

-

ஏழு தொகுப்பாக வந்துள்ள அரிய பெரிய தமிழ் தமிழ் ஆங்கில அகர முதலியவை ஓரியின் கணைபோல் ஊடுருவிப் பாரியின் கைபோல் பைந்தமிழ் உண்மையைப் பரப்பிடும் நூல் சென்னைப் பல்கலைக்கழக அகர முதலியின் சீர்கேடுகள்.

பாவாணர் களஞ்சியம் - த.ச. தமிழனார்.