உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர் மடல்கள்

பாவாணர்

253

பாவாணர்

கடிதங்கள் என்னும் தொகை

நூல்

உருவாகியபின் கிடைத்த -ஏறத்தாழ -அறுநூறு கடிதங்களின் தொகை இச்சுவடி அடைவு செய்து அச்சுக்கு அணியமாக்கிக் கழகத்தில் கொடுக்கப் பட்டுள்ளது. தொகுப்பு நிறைவு : 1988 தொகுப்பு : இரா. இளங்குமரன்.

வாழ்வும் வரலாறும், உடலும் உள்ளமும், அன்பும் நண்பும், ஆய்வும் அறிவுறுத்தமும், உலகத்தமிழ்க் கழகமும் பணியும், அமைப்புகளும் நிகழ்ச்சிகளும்,நூலார்வமும் நூலாக்கமும், அச்சீடும் மெய்ப்புப் பார்த்தலும், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பணி, சொல்வளம் என்னும் 10 தலைப்புகளில்இயல்வது.

சிலநூற்குறிப்புகள்:

மருத நிலப்பாடல் - 1925

மருத நிலத்தினர் பாடும்கும்மி

நொண்டிச் சிந்து மெட்டமைந்தது.

-

தமிழ் நூல்விவர அட்டவணை 6/2.

ஆனந்தக்களிப்பு.

கிறிஸ்தவக்கீர்த்தனம் - முதற்பாகம்

பாரதி அச்சுக்கூடம் மன்னார்குடி 1932.

தமிழ் நூல்விவர அட்டவணை 7/1

துவாரகை மன்னன் அல்லது பூபாரந்தீர்த்த மன்னன்

எஸ்.எஸ். சாஸ்திரி & Co. 1932

துவாரகை மன்னனாகிய கண்ணபிரானைப் பற்றியது (பூபாரந்தீர்த்த என்னும் வில்லியாட்சி நூற்பெயர்த் தூண்டல் ஆகியிருக்கலாம்)

தமிழன் எப்படிக் கெட்டான்?

முகவுரையில்: "தமிழன் வைத்துக் கெட்டமை இச் சுவடியில் விரிவாய்க் கூறப்படும்" என்கிறார்.

நூல்:1.மதப்பைத்தியம் 2. கொடைமடம் 3. இனநலம்