உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

பாவாணர் பொன்மொழிகள்

பாவாணர் நூல்களில் பொதிந்து கிடக்கும்பொன் மொழி களைத் தொகுத்து வெளியிட்ட நூல் தொகுப்பு; இரா. இளங்குமரன். வெளியீடு : கழகம். முதற்பதிப்பு : 1985. ஆராய்ச்சி முன்னுரையுடன் நூல்50 பக்கம்.

பொன்மொழிகள் பொருளகர நிரலில் அகமணம் புறமணம் தொடங்கி, வேலைநிறுத்தம் என நிறைகின்றது. இதன்கண் உள்ள பொன்மொழிகள்; 156. சிலஇரண்டாய், மூன்றாய் அமைந்ததுடன் பன்னிரண்டாகப் பல்கியதும் உண்டு. கடிதங்களில்கண்ட பொன் மொழிகள் சில, முன்னுரையில் அமைக்கப்பட்டுள்.

பாவாணர் வேர்ச்சொற் சுவடி

1940 இல் எழுதிய சிறிய சுவடி இது. ஒருபக்கத்திற்குள் 4 வேர்ச் சொற்றிரிபுகள் அடங்குமளவு (25 பக்கம் வருமாறு) 100 முக்கியமான வேர்களைப் பற்றி எழுதியனுப்புவேன் (29-8-40) என்று கூறியவாறு எழுதிய நூல் 14-9-40 வேர்ச் சொல் சுவடி எழுதி முடிந்தது என்கிறார். எனினும் பாவாணர் வாழ்நாளெல்லாம் அந்நூல் வராது நின்றுவிட்டது. அவர் கடிதங்களைத் தொகுக் குங்கால் இச்சுவடி கிட்டியது. அதில் 'அர்' தொடங்கி 'வேள்' முடிய 65 சொற்களுக்கு வேர் விளக்கம் காட்டிய அளவேயுள்ளது. உட்பிரிவுகளையும் சேர்த்து நூறுசொற்கள் எனக் கணக்கிட்டார் என்றும் தோன்றவில்லை. வரிசை யெண்ணும் தொடர்ச்சியாக உள்ளது. இந்நூல் முன்னுரை விளக்கத்துடன் என்னால் வெளியிடப்பட்டது. வெளியீடு: கழகம்.

பாவாணர் பாடல்கள்

பல்வேறு காலங்களில் பல்வேறு நூல்களிலும்; பல்வேறு அன்பர்களுக்கு எழுதிய வாழ்த்து நன்றிகளிலும் இருந்து தொகுக்கப்பட்ட பாடல் 320 க்கு மேற்பட்டவை. அவை பாயிரம், வாழ்த்து, இரங்கல், நன்றி, ஐந்தகம், பதிகம், வரலாறு, கதை, பலவகை, முடிநிலை எனப்பதின் தலைப்புகளில் அமைந்தன. விரிவான தொகையுரையைக் கொண்டது. தொகுப்பாளன்: இரா. இளங்குமரன்.