உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

251

பாவாணர் தென்மொழியில் (1-8-1959) எழுதிய கட்டுரை இது. பயன் கருதியும் பன்னூற்றுவர் விழைவினை ஏற்றும் நூல் வடிவு பெற்றது இது (1-8-1969)

நூல் 21 பக்கங்களையுடையது. பறம்புக்குடியில் நடைபெற்ற உத.க. முதல் மாநாட்டில் வெளியிடப்பட்டது. உத.க. வெளியீடு இது. பழமொழி பதின்மூவாயிரம் முதலியன.

பழமொழி பதின்மூவாயிரம், தொல்காப்பியச் சீர்மை, இசைத்தமிழ்ச் சரிதம், சொல்லியன் நெறி முறை முதலிய நூல்களைப் பாவாணர் எழுதி முடித்த செய்தி அறிய வருகின்றது. இவ்வாறே வேறு சில சிறு நூல்களும் பெருநூல்களும் வெளிவந்த - வெளிவர ருக்கின்ற பட்டியலில் காணப்பட்டும் கைப்படவில்லை. சில நூல்கள் அச்சேறாமையும் சில எழுதப்படாமையும் அறிய வருகின்றன. சில நூல்களின் பெயர்கள் சிறிது பெயர் மாற்றத்துடனும் வெளிவந்துள்ளன.

பாவாணர் கடிதங்கள்

பாவாணர் பல்கால்தம் நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் பதிப்பகத்தார்க்கும் வரைந்த கடிதங்களின் (1520) தொகைநூல் இது. அவர்தம் 50 ஆண்டுக் கடிதங்கள் இவை. 1931 முதல் 1963 வரை உள்ளவை அனைத்தும் கழகத்திற்கு எழுதியயை. அதற்குப் பின்னரே கழகத்திற்கும் பிறர்க்கும் எழுதியது. இக் கடிதங்கள் க் பொருட்பகுப்பு முறையால் 28 கூடியது, நூற்பகுதி 192 பக்கம். முதற்பதிப்பு பிப்ரவரி 1985. தொகுப்பு : இரா. இளங்குமரன். வெளியீடு ; கழகம். வெளியீட்டு எண்: 1779.

பாவாணர் உவமைகள்

பாவாணர் நூல்களில் காணக்கிடக்கும் உவமைகளைத் தொகுத்த தொகை இது. முன்னுரை ஆறு பக்கம். தமிழ், தமிழ்ப் புலவர், பிறமொழி, வரலாறு, ஆராய்ச்சி, சொல், பொருள் விளக்கம், நூல் என எண் தலைப்புகளில்64 பக் அளவில் நூல்அமைந்துளது. இதிலமைந்துள்ள உவமைகளின் எண்ணிகை 221,

வெளியீடு : கழகம் ; முதற்பதிப்பு 1986

தொகுப்பு இரா. இளங்குமரன்.