உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

சித்திரனார் இசைவுடன் பாவாணரின் 86 ஆம் ஆண்டு பிறந்த நாள் வெளியீடாக பாவாணர் பதிப்பகம் (பெங்களூர்) வெளியிட்ட நூல், இதன் பதிப்பாசிரியர் பேரா. கு. பூங்காவனம் அவர்கள். பதிப்பக முன்னுரை, பாவாணர் பதிப்பகம், பாவாணர் வாழ்க்கைக் குறிப்பு பாவாணர் நூல்கள் என்பன முன்னிணைப்புகள். கட்டுரை எழுதுவது எப்படி?

பாவாணர் எழுதிய உயர்தரக்கட்டுரை இலக்கணம் என்னும் நூலில் இருந்து கட்டுரை எழுதுவது எப்படி என்னும் பகுதி பிரித்துத் தனிச் சுவடியாக அமைக்கப்பட்டது இஃதாகும். முப்பத்தாறு பக்கங்களையுடைய இச்சுவடி கழகத்தின் 1717 ஆம்வெளியீடாக 1984 இல் வெளிவந்தது.

குற்றங்களும் குணங்களும், பாகியமைப்பு, கட்டுரை வரைவு என்னும் முப்பகுப்புகளையுடையது,

கடிதம் வரைவது எப்படி?

பாவாணர் எழுதிய உயர்தரக் கட்டுரை இலக்கணத்தில் இருந்து பகுத்துக் கொள்ளப்பட்ட வெளியீடு இது. கடித வடிவம், கடித வகைகள் என்னும் இரு பிரிவுகளையுடையது. வெளியீடு, கழகம். முதற்பதிப்பு : 1984. பக்க அளவு : 36. இடம் நாள், செய்தி ஆகியவற்றில் காலத்துக்குத்தக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளமை தெரிகின்றது. சிலபகுதிகள் சுருக்கவும் செய்யப்பட்டுள்ளது.

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலி

முதன்மடலம்- முதற்பகுதி

மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர். செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் அகரமுதலித் திட்டஇயக்ககத்திற்காகத் தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம் வெளியிட்டது.

முதற்பதிப்பு : சனவரி 1985.

முதற்கண் அண்ணா வாழ்த்து முதல்பிழைதிருத்தம் ஈறாக 112 பக்கங்கள் அகரமுதலிப்பகுதி 1-574. இறுதிச்சொல் அனோபகம். ஆகாரவரியில் 'ஆசை மொழி' என்பது வரையில் எழுதப்பட்ட செய்தி அறிய வருகிறது. அகரமுதலி இயக்குநர் (பொறுப்பு) பேரா. இரா. மதிவாணரால் அச்சுக்கு அணியப்படுத்தி முடிக்கப் பட்டது.