உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆராய்ச்சி முன்னுரை

அணிகலன்:

எவர்?

அணிகளை விரும்பார் எவர்? அணிகலன்களை விரும்பார்

அணிகலன் என்பது என்ன? அஃது எப்படி அமைந்தது?

அழகான மணிக் 'கல்'களைத் தேர்ந்து, ஓர் ஒழுங்கு முறையால் அமைக்கப்படுவதே அணிகலன். அணியும் கலனும் இணைந்து காட்டும் விளக்கம் இது.

கல்' இல்லாமல்'கலன் முன்னிலை காட்டுவது இந்நிலை!

ல்லை: கலன் என்பதன்

கல் மட்டுமோ கலனாம்? வரம்பிலா விலை வயிரமும், முடிவிலா விலை முத்தும், தாமே அணிகலமாமோ? அவற்றைத் தாங்கி, அமைப்பும் அழகும் ஊட்டும் கொள்கலம் வேண்டுமே! அக் கொள்கலம் எது? பொன்னே அது!

பொன்

பொன், தானே அணியாம்! மற்றை அணிகலன்களைத் தன்னுள் கொண்டு பொலிவு செய்வதுமாம்! தானே உணவாயும், மற்றை உணவுகளைத் தருவது மாயும் அமைந்த மழையன்னது பொன்னெனலாம்! பொன்தானே பொலம், பொற்பு, பொலிவின் அடிப்படை!

பொன் மொழி:

உடற்கு அணியாம் பொன்னே இத்தகைத்து எனின், அறிவறிந்த சான்றோர் அருளிப்பாடாய் - அறப்பாடாய் அறிவுப்பாடாய் - வெளிப்படும் 'பொன் மொழி' யின் சீர்மை எத்தகைத்தாம்? உயிர்க்கு - உணர்வுக்கு - உய்வுக்கு - உந்து கோளாய் வந்தமையும் பொன்மொழியின் பெருமை, என் மொழியின் அளவில் அமையுமோ?