உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்:

பாவாணர் பொன் மொழிகள்

279

ஐம்பானாண்டுகள் தனித்தமிழ்த்தவமே தம் பொருளாய் - தம்வாழ்வாய்க் கொண்ட தவப் பெரியார் பாவாணர், தம் படைப்புகளில் வழங்கியுள்ள பொன் மொழிகளை ஓராற்றால் தொகுத்தவை இச் சுவடியாய் அச்சுறலாயிற்று. இஃது அகர முறையில் அகமணம் புறமணம் தலைப்பட்டு வேலைநிறுத்தத் தோடு நிற்கின்றது.

எண்ணிக்கை:

தொகுத்துக்காட்டப்பட்டுள்ள பொன்மொழிகள் எண்ணிக் கையால் 156. ஆனால், சில தலைப்புகளில் இரண்டாய் மூன்றாய் அமைந்தனவும் உள. ஏழென எழுந்தவும் உள (வழிபாட்டொழுங்கு). பன்னிரண்டெனப் பல்கியவும் உள (மணமக்கட்குப் பார்க்க வேண்டிய பொருத்தங்கள்).

அளவு:

ஒன்றரை வரியில் அமையும் பொன்மொழியும் உண்டு (வரிசையறிதல்). பதினைந்து வரிகள் (பிள்ளைப் பேறில்லாத வரைப் பாராட்டுதல்) பத்தொன்பது வரிகள் (பிள்ளை வரம்பீட்டில் பால் பற்றிய கருத்து) என விரிந்தவும் உண்டு.

உவமை :

பொன்மொழிகள் உவமை வடிவு தாங்கல் உண்டு. எடுத்த பொருளை உவமையால் விளக்குதல் சிறப்புரிமை வாய்ந்தது. அத் திறத்தில் தேர்ச்சி மிக்கவர் பாவாணர். அவர் தம் உவமைகள் 'தனிச் சுவடி'யாய் வெளிப்பட்டுள்ளது. எனினும், இப் பொன் மொழியிலும் இடம் பெற்றவை சிலவுள.

எப்படிப் பேசினால் என்ன, ஏழையர்க்குப் பொலக் கொடை, குலப்பிரிவொழிப்பு, குழந்தை கைப் படைக்கலம், மலடாக்கமும் மதமும், வழியறியா வழிகாட்டி, வானத்து மீனுக்கு வன்றூண்டில் முதலியவற்றைக் காண்க.

சொற்பொருள் விளக்கம் :

சொல்லுக்குத் தரும் பொருள் விளக்கமே பொன் மொழியாம் சிறப்பை அன்பு, காதல், தமிழப் பார்ப்பார், திருமணம்,நாகரிகம், பண்பாடு, மதம் என்பவற்றுக் காண்க.