உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280

நுண் பொருள் நயம் :

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

பொன்மொழி, நுண் பொருள் நயத்தால் விளங்குவதை இல்லறம் துறவறம், இல்வாழ்க்கை, நாகரிகமும் பண்பாடும் என்பவற்றுக் காண்க.

சொன்னடையின் எதிரிடைச் சுவை

சொன்னடையின் எதிரிடை, சுவை பயப்பதைக் குழப் பருவம் கிழப்பருவம் (ஆன்பண்ணை,) அகமணம் புறமணம், அல் வாழ்க்கை நல் வாழ்க்கை, காதல் மணமும் சாதல் மணமும், படும் பாடும் கெடும் கேடும் (இந்தியாவின் அருளறம்) தூய தீய (நகரமும் நரகமும்) முதலியவற்றால் அறியலாம்.

அடுக்குத் தொடுப்பு :

அடுக்குத் தொடுப்பின் அருமையையும் அழகையும் இருகட்சியரசு, இல்லறமே நல்லறம், ஒப்புயர்வற்ற தமிழர், கைந்நூலாடை, நோய்க்கேற்ற மருந்து, தொழிற் சாலையிடம் என்பவற்றால் அறிக.

தனியொரு பார்வை:

பாவாணர் தம் தனியொரு பார்வையைப் பிள்ளைப் பேறில்லாரைப் பாராட்டல் (பக். 30.35) கட்டாய மலடாக்கம், துறவியரை ஊக்குதல் என்பவற்றில் காணலாம்.

கட்சியிணைப்பு, எழுத்துத் திருத்தம், மாணவரும் கட்சியமைப்பும், பிறப்பியம் பாராமை, திருமணக் காலம் பார்த்தல், வேலை நிறுத்தம், பன்றிவளர்ப்பு, மதுவிலக்கு என்பவும் இத்தகையவே.

காலத்திற் கேற்ற நடைமுறைத் திட்டம் :

இக்காலச் சிறந்த துறவு, இல்லறத்தின் பாற்படுவன, உறவினர் மணவீட்டில் தங்கல், கொல்லரைப் பொறி வினையிற் பயிற்றுதல், தீயோரை நல்வழிப் படுத்தல், நிலக் கொடை, பொருளியல் நூலுக்கு மாறான குற்றம், மொய் செய்தல், வீடு கட்டும் திட்டம் என்னும் தலைப்பில் உள்ளன, காலத்திற் கேற்ற நடைமுறைத் திட்டமாம்.

குடும்பக் கட்டுப்பாடு:

இரு பிள்ளை வரம்பும் கட்டாய மலடாக்கமும் குடும்பக் கட்டுப்பாட்டு விளக்கம், துறவியரை ஊக்குதல், மலடாக்க அச்சம்,