உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

பயிற்று மொழி, பொத்தகக் குழு, மொழிபெயர்ப்பும் புதுச் சொற் புனைவும், வாழ் நாள் நீடித்தல் என்பன தமிழ் தமிழினம் பற்றிய பாவாணர் ஆய்வுக் குறிப்புகளாகும்.

அருள் :

ஆன் பண்ணை, இந்தியாவின் அருளறம், உழைப்பாளி, ஏழையர்க்குப் பொலக் கொடை, சூதாட்டொழிப்பு என்பவை அருள் வழிப்பட்ட பொருள்கள்.

இறை வழிபாடு:

இறை வழிபாட்டிலும், இறைமை உணர்விலும் ஈடுபாடு மிக்கவர் பாவாணர். இறை வழிபாடு, இறைவன் ஏற்பாட்டைப் பழிப்பவர், இறைவனுக்கு ஏற்ற வழிபாடு, உண்மையான பகுத்தறிவு, கடவுள் உண்மை, கடவுள் உண்மை இன்மை, கருத்து வேறு பாட்டை மதித்தல், தென் மதம், வழிபாட்டொழுங்கு வழியறியா வழிபாடு, வீண் செயல் என்பவை பாவாணர் இறை வழிபாட்டில் கொண்டிருந்த பற்றுமையை வெளிப்படுத்தும்.

சில சிறப்புக்கூறுகள்:

ஒருவன் உழைப்பாளியாய் உதவும் நிலையைப் பற்றியும், உறுமதி மாணவனை ஊக்கி உயர் சம்பளம் அளித்தலைப் பற்றியும், பொற் கொல்லர்க்கு நகை வரம் பீட்டை உயர்த்துதல் பற்றியும், குறிப்பிடத் தக்க பணிகளுக்கு நாட்டு மக்களையே அமர்த்துதல் பற்றியும், மதுவிலக்கை விலக்குதல் மருந்து போல் கொள்ளத் தக்கது பற்றியும், மரமடர்ந்த காடுகளை முப்பகுப்புச் செய்வது பற்றியும், யாழ்ப்பாணம் தனி நாடாதல் பற்றியும், வணிக இடைஞன் வேண்டா என்பது பற்றியும், வள்ளுவர் கூட்டுடைமை பற்றியும், வாழ்நாள் நீடித்தல் வழி பற்றியும் பாவாணர் கூறும் கருத்துகள் சிறப்பாக ஆய்ந்து கொள்ளத் தக்கன.

நகைச் சுவை :

ஒப்புயர்வற்ற தமிழர் எனத் தமிழரைக் குறிப்பது அங்கத அருமை உடையது. நகரமும் நரகமும் பற்றிய நவிற்சி நயத்தகு நகைச் சுவை அமைந்தது. பாவாணர் மொழிகளாம் 'பொன்' வெளிப்பட உதவியது ஒரு 'முத்து'; அம் முத்து கழக ஆட்சியாளர்