உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர் பொன் மொழிகள்

பாவாணர் பொன்மொழிகள்

அகமணம் புறமணம்

285

அகமணமாவது, ஒரு குலத்தார் தம் குலத்திற்குள்ளேயே மணத்தல். புறமணமாவது, ஒரு குலப்பிரிவார் தம் பிரிவிற்குள் மணவாது வேறொரு பிரிவில் மணத்தல்.

அஞ்சல் அட்டை உறை

த.தி.12.

தமிழ்நாட்டில் வழங்கும் அஞ்சற் படிவங்களும், அட்டை உறை முத்திரைகளும் தமிழாங்கிலச் சொற்களையே கொண்டி ருத்தல் வேண்டும்.

அல் வாழ்க்கை

த.இ.வ .வ.310.

ஒருவன் துறவு மேற்கொண்டும் அதற்குரிய அறம் பூணானாயின் அது ஈரறத்தொடும் கூடாது தீவினை மிகுக்கும் அல்வாழ்க்கையாம். த.தி.முன்.3.

அன்பு

அன்பென்பது ஏசுவும் புத்தரும் போல் எல்லாரிடத்தும் காட்டும் நேயம். அது அறமாகவும் அறவினை கட்கெல்லாம் காரணமாகவும் கருதப்படும்.

ஆங்கிலந் தந்த விடுதலை

த.தி.6.

இந்தியர் ஆங்கிலத்தைக் கற்கவும் கேட்கவும் கூடா தென்றும், கற்பினும் கேட்பினும் நாவையறுக்கவும், காய்ச்சிய ஈயத்தைக் காதில் வார்க்கவும் வேண்டுமென்றும் ஆங்கிலர் கோட்பாடு கொண்டிருந்திருப்பின் காந்தியடிகளும் நேருவும் தோன்றியிரார். இந்தியா விடுதலை பெற்றிருக்காது. ம.வி.163. ஆட்சி ஒப்புமை

ஆட்சி ஒப்புமை நட்புறவிற்கே அன்றி அடிமைத் தனத்திற்கு ம.வி.35.

ஏதுவாகாது.

ஆய்வுத்துறை அகவை வரம்பு

ஒருவர் அறுபது அகவைவரை பணியாற்றலாம். ஆற்றல் குறையின் முன்னும் அது நிறையின் பின்னும் ஓய்வு பெறலாம். ஆராய்ச்சி ஆசிரியப் பணி முதலியவற்றிற்குப் பட்டறிவு மிகமிக ஆற்றல் பெருகுவதனால், அப் பணியாளர்க்குப் பகரமாகப்