உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

பணியாற்றப் பிறரில்லா விடத்து இயன்றவரை நீட்டிப்புக் கொடுக்கலாம். ஓய்வகவையைத் தீர்மானிக்கும் அளவையாய் இருக்க வேண்டியது பணித் திறமையேயன்றி அகவை வரம்பன்று. ம.வி.109.

ஆன்பண்ணை

உலக முழுதும் தொன்று தொட்டுக் குடிப்பாகவும் குழம்பாகவும் பயன்பட்டு வருவதும் குழப்பருவம் முதற்கிழப் பருவம் வரை வாழ்நாள் முழுதும் ஊட்டந் தருவதும், ஆனைந்து என்னும் பால் தயிர் மோர் வெண்ணெய் நெய் ஆகிய ஐவகையில் ஆரமுதாவதுமான ஆவின்பால், எல்லா வகுப்பார்க்கும் யிருப்பதானாலும் குழவிக்குத் தாய்ப்பால் போல் நோயாளிக்கு முற்றுணவாக உதவுவத னாலும் நாடு முழுதும் ஆனபண்ணைகள் நிறுவுதல் வேண்டும். ம.வி.76.

இக்காலச் சிறந்ததுறவு

இக்காலத்தில், துறவு பூண்டோர் காட்டிற்குச் செல்லாது நாட்டிலும் நகரத்திலும் தங்கி, தம்மாலியன்ற வரை பொது மக்கட்குத் தொண்டு செய்வது சிறந்த துறவாகக் கருதப்படுகின்றது. த.தி.முன்.3.

இந்தியாவின் அருளறம்

இந்தியா மதங்கட்கும் அருளறத்திற்கும் உலகப் புகழ் பெற்றது. பலவிலங்குகள் அல்லது அவற்றின் வடிவங்கள் தெய்வமாக இந்தியரால் வணங்கப்படுகின்றன. ஆவின் நல்வாழ் வொன்றையே குறிக்கோளாகக் கொண்ட ஒரு கூட்டமு முள்ளது. ஆயினும் சில விலங்குகள் படும்பாடும் கெடுங்கேடும் நீங்க வழியில்லை... இந்தியாவில் விலங்கினம் இருக்கும் நிலைமையை உணர்த்த அவற்றின் கழுத்துப்புண்ணும் விலாவெலும்புத் தோற்றமும் போதும். ம.வி.85.

இம்மைப் பேரின்பம்

ஒருவர்க்கு ஊண் இசை காட்சி முதலிய பிறவற்றாலும் இன்பமுண்டாகுமேனும் பேரளவுபற்றியும் ஐம்புலனும் தழுவல் பற்றியும் பெண்ணின்பமே இம்மையிற் பேரின்பமாகக் கொள்ளப் பெற்றது. த.தி.முன்.1.

இருகட்சியரசு

ஆனைக்கும் அடிசறுக்குமாதலாலும், தன்குற்றந் தனக்குத் தோன்றாதாதலாலும் முற்றுமுணர்ந்தவர் மக்களினத்திலில்லை