உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர் பொன் மொழிகள்

287

யாதலாலும், கட்டுப்பாடில்லாவிடின் காவலனுங் காவானா தலாலும் செங்கோலாட்சியொடு கூடிய இருகட்சியரசே குடியரசிற்கேற்றதாம். ம.வி.36.

இருபிள்ளை வரம்பும் கட்டாய மலடாக்கமும்

பிள்ளை பெறுபவர் இருபிள்ளைக்கு மேற் பெறுதல் கூடாது. இரண்டிற்கு மேற்பட்ட பிள்ளைகட்குப் பங்கீட்டுரி மையும் தகாது. மிகைப் பிள்ளைகளுடன் பகிர்ந்துண்டலே பெற்றோரியல்பாகுமாதலால், இருபிள்ளையென்னும் வரம்பீடு மட்டும் போதாது. இரண்டாம் பிள்ளைக்குப்பின் தாய்க்குக் கட்டாய மலடாக்கமும் செய்தல் வேண்டும். அல்லாக்கால் வரம்பு மீறுபவரை அடிக்கடி கவனிக்கத் தனி அலுவலர் வேண்டியிருக்கும். அது அரசிற்கு வீண் செலவாகும். ம.வி.66.

இருமொழிக் கொள்கை

ஒவ்வொரு நாட்டிலும் நாட்டுத் தாய்மொழி ஆங்கிலம் ஆகிய இருமொழியே கற்பிக்கப்படலும் கல்வி வாயிலா யிருத்தலும் வேண்டும். பிறமொழி பேசும் சிறுபான்மையர் பிள்ளைகளும் அவ்வந் நாட்டுப் பெரும்பான்மை மொழியையே கற்றல் வேண்டும்... அல்லாக்கால் மொழிவாரி மாநிலப் பிரிவு என்பது பொருளற்றதும் பயனற்றதுமாம். ம.வி.88

இல்லறத்தின் பாற்படுவன

ஒருவன் மணஞ் செய்யாது இறுதிவரை மாணியாய் (பிரமச்சாரியாய்) இருப்பினும், அவன் உலகப் பற்றுள்ள வனாயின் அவன் வாழ்க்கை இல்லறத்தின் பாற்படும்.

ஒருவன் நாட்டினின்று நீங்கிக் காட்டில் வாழினும், மனையாளொடு கூடி வாழின் அது இல்லறத்தின் பாற்படும். த.தி.முன்.3.

இல்லறம் துறவறம்

ஓரறம் ஈரறத்திற்கும் பொதுவாயினும் இல்லறத்தில் எளியதாகவும் செயல்பற்றியதாகவும், துறவறத்தில் அரியதாகவும் கருத்துப்பற்றியதாகவும் இருக்கும். எ-டு: களவு செய்யாமை இல்லறம்; களவு செய்யக் கருதாமை துறவறம். ம.வி.38

இல்லறம் துறவறம் :

மாந்தன் வாழ்க்கை, இல்லறம் துறவறம் என இரு வகைத்து. மனைவியோடு கூடி இல்லத்திலிருந்து அதற்குரிய அறஞ் செய்து