உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

வாழும் வாழ்க்கை இல்லறம்; உலகப் பற்றைத் துறந்து அதற்குரிய அறத்தோடு கூடிக் காட்டில் தவஞ் செய்து வாழும் வாழ்க்கை துறவறம். அது மணவா நிலையிலும் தொடங்கலாம். மணந்த நிலையிலும் தொடங்கலாம். த.தி.முன்.3.

இல்லறமே நல்லறம்

இறைவன் ஏற்பாட்டின்படி மக்களுலகம் இடையறாது தொடர்ந்து வருவதற்கு இல்லறமே காரணமாதலாலும், துறவி யர்க்கும் அவர் முற்றத் துறக்கும் வரை இன்றியமையாத் துணையா யிருப்பது இல்லறத்தாரே யாதலாலும், இல்லறத்தாலும் வீடுபேறு கிட்டுமாதலாலும் மாயமால நடிப்பிற் கிடம் துறவறத் தினும் இல்லறத்திற் குறைதலாலும் இல்லறமே நல்லறமாம்.

இல்வாழ்க்கை

த.தி.முன்.3

ஒருவன் இல்லத்தில் இருந்து மனையாளோடு கூடி வாழினும் அறஞ் செய்யாது இருப்பின் அவன் வாழ்க்கை இல்லறமாகாது; வெறுமனான இல்வாழ்க்கையாம். த.தி.முன்.3 இலங்கைத் தூதர்

இலங்கையில் இடர்ப்படும் மக்கள் பெரும்பாலும் தமிழராயிருத்தலின் அவர்களின் உரிமையைப் பேணிக் காத்தற்கு அங்குள்ள இந்தியத் தூதாண்மைக் குழுத்தலைவர் (Head of the Indian Embassy) இனப்பற்றுள்ள தமிழராகவே இருத்தல் வேண்டும். ம.வி.202.

இறைச்சிகளும் மருந்தும்

தமிழ மருத்துவத்தில் சில இறைச்சி வகைகளும் கொடிய நோய்களுக்குக் கைகண்ட மருந்தாகக்குறிக்கப் பட்டுள்ளன. எ-டு:

எலும்புருக்கும் இருமலுக்குப் பச்சைப்புறா.

மூல நோய்க்குப் பன்றி வார்.

அம்மை நோய்க்கும் பன்றியிறைச்சி தடுப்பு மருந்தாம்.

இறைவழிபாடு

ம.வி.76

ஒருவன் காலையில் எழுந்தவுடனும், பின்னர் உண்ணு முன்னும், ஓரிடத்திற்குப் புறப்படு முன்னும், ஒரு வினையைத் தொடங்கு முன்னும், ஒரு நன்மை கிட்டிய போதும், தீங்கு