உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

முடியுமோ அத்துணை விரைந்து திரும்பிவிட வேண்டும்; 'என்று செல்வாரோ'என்று மணவீட்டார் ஏங்கிக் கலங்குமாறு பன்னாள் தங்கிவிடுதல் கூடாது.

உறவினர், மொய்வைத்தல்

5.9.61.

உறவினர் மொய் வைக்கும் போது, மணவீட்டார் தமக்கு முன்பு செய்த அளவே செய்யவேண்டும் என்று கருத வேண்டுவ தில்லை. தம் செல்வநிலைக் கேற்பக் கூட்டியோ குறைத்தோ செய்யலாம்; அல்லாக்கால் அது. வட்டியில்லாக் கடன்போலிருந்து தன் சிறப்பையிழக்கும். மணவீட்டாரும் உறவினர் நிலையறிந்து பெருந்தன்மையாய் இருந்து கொள்ள வேண்டும்.

உழைப்பாளி

ததி61.

உயர்நிலைக் கல்விக்கு வேண்டும் மதிநுட்பம் இல்லாமையால் ஒருவன் உழைப்பாளியாகின்றான். அது அவன் தவறன்று. ஆதலால், அவனை இகழக் கூடாது. அவன் தன் உடல் வலிமையால் அஃதில்லாத உயர்கல்வியாளனுக்கு உதவுவதைப் பாராட்ட வேண்டும். ம.வி.42.

உறுமதி மாணவரைப் போற்றல்

ஏதேனும் ஒரு துறையில் ஒரு மாணவன் உறுமதி (Genius) என்று காணப்படின்,அரசு அவனைக் குல மத கட்சிச் சார்பு நோக்காது ஊக்குதலும் அவன் அயல்நாட்டிற்குச் செல்லாவாறு அவனுக்கு உயர்ந்த சம்பளம் அல்லது மானியம் அளித்தலும் வேண்டும். ம.வி92.

எப்படிப் பேசினால் என்ன?

மொழியின் பயன் கருத்தறிவித்தல்தானே, அதை எப்படிப் பேசினால் என் என்று வினவுவது, உண்ணுதலின் பயன் பசியைப் போக்குதல் தானே! எப்படி யுண்டாலென்ன? (சமைக்கவும்) பல் துலக்கவும் குளிக்கவும் துப்புரவான இடத்தில் அமரவும் இலையில் அகப்பையால் வெவ்வேறாகப் படைக்கவும் ஒவ் வொன்றாக உண்ணவும் வேண்டுமோ? சமைத்த கலத்திற்குள்கையை விட்டே எடுத்துண்ணலாமே! என்று வினவுவது போலிருக் கின்றது. பலவினைகள் இருதிணைக்கும் பொது ஆயின் செய்யும் முறை வெவ்வேறு. உயர்திணைமாந்தன் எவ்வினையையும் நாகரிகமாகவும் பண்பாட்டுடனும் செய்தல் வேண்டும். ம.வி.54. எழுத்துத் திருத்தம்

ஈ என்னும் வடிவை இ என்று குறிப்பதும், ஒளகார வடிவின் உறுப்பான 'ள' என்னும் குறியைச் சிறிதாக எழுதுவதும் ஆகிய