உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடியிருப்புரிமை

பாவாணர் பொன் மொழிகள்

293

ஒரு நாட்டிற் பன்னீராண்டு தொடர்ந்து குடியிருந்தவர்க் கெல்லாம் குடியுரிமையுரியதாகும். அவரை நாட்டை விட்டு அகற்றுவது நாகரிக அரசிற்குரியதன்று. தமிழ் நாட்டிற்குக் கோன்மை இருந்திருப்பின் அநாகரிக அரசுகளுடன் எதிர்த்துப் போராடித் தமிழரின் உரிமையைக் காத்திருக்கும். ம.வி.203. குடும்பக் கட்டுப்பாட்டு விளக்கம்

செய்தித்தாள், வானொலி, திரைப்படம், தொலைக்காட்சி, சொற்பொழிவு, துண்டு வெளியீடு முதலிய அறிவிப்பு வாயில் களால் மக்கட் பெருக்கத் தீங்கையும் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் நன்மையையும் பொது மக்கட்கு விளக்கிக் கூறல்வேண்டும். சுவர்களிலும் பலகைகளிலும் சில சொலவங் களை (Slogans) மட்டும் எழுதிவைத்தாற் போதாது. நம் நாட்டில் நூற்றுமேனி எழுபதின்மர் இன்றும் தற்குறிகளாய் (கீறற் புள்ளி களாய்) இருப்பதால் அவர்க்கு அச் சொலவங்கள் பயன்படா.

குலப்பிரிவு ஒழிப்பு

ம.வி.68.

ஓர் உடம்பு நலமாயிருத்தல் வேண்டின், அதன் உறுப்புகள் எல்லாம் நலமாயும் ஒன்றுபட்டும் இருத்தல் வேண்டுவதுபோல் ; ஒரு நாடு முன்னேற வேண்டுமாயின், அதன் மக்கள் வகுப்பா ரெல்லாம் முன்னேறியும் ஒன்று பட்டும் இருத்தல் வேண்டும். தமிழ்நாட்டில் இத்தகைய முன்னேற்றத்திற்குக் குலப் பிரிவினை பெருந்தடையாய் இருத்தலின் அரசியலார் அதை அறவே ஒழித்தற்கான செயல்களை உடனடியாய் மேற்கொள்ள வேண்டும். த.தி.62.

குலவுயர்வு தாழ்வு

பண்டைத் தமிழகத்தில் (பிறவிக் குலப் பிரிவினை) மூடவழக்கம் இருந்ததேயில்லை. எல்லா வகுப்பாரும் பிற நாட்டார்போல் தம் பெயரை இணைப்பு வாலின்றி வெறுமை யாகவே வழங்கி வந்தனர். அறிவும் நாகரிகமும் துப்புரவும் ஒழுக்கமும் உண்மையின்மைகளே உயர்வு தாழ்வைக் குறித்து வந்தன. ஆரியப் பிறவிக்குல வுயர்வு தாழ்வைத் திருவள்ளுவர் தெளிவாகக் கண்டித்தார்.

த.இ.வ.319.