உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

குலவெறி கொள்ளாமை

தமிழரைப் பிரித்துக் கெடுத்தற்கென்றே பிறப்பொடு தொடர்புற்ற குலப்பிரிவினை அயலாராற் புகுத்தப்பட்ட தென்றும், அது நூல் உத்தி பட்டறிவுகட்கு முற்றும் முரணான தென்றும், உலக முழுமையினும் இந் நாவலந் தேயத்திலேயே அது உள்ள தென்றும், திருவள்ளுவர் திருமூலர் முதலிய பெரியோ ரெல்லா ராலும் கண்டிக்கப்பட்டதென்றும் உணராத தமிழர் இன்னும் குலவுணர்ச்சியிலேயே திளைத்து வருகின்றனர். இதனால் ஒவ்வொரு குலத்தாரும் தமக்குள்ளேயே மணந்து தமிழினத்தில் பேரறிவுச் சுடர்கள் பெருவாரியாய்ப் பிறவாதபடி தடுத்து விடுகின்றனர். அதோடு தமிழர்க்குள் ஒற்றுமையும் இல்லாது போகின்றது.

குலவேற்றுமையால் உயர்திணைப்பண்பு குன்றல்

த.தி50.

உலகில் வேறெங்கு மில்லாத ஒரு குமுகாயக்கேடு Socil evil இங்கு இந்தியாவில் உள்ளது. வேறு எந்நாட்டிலும் எவர் பெயரைக் கேட்பினும் அவர் பெயர் மட்டும் தோன்றும்; இங்கோ ஒரு பெயருடன் ஐயர், ஐயங்கார், ஆச்சாரியார், பிள்ளை, முதலியார், செட்டியார், கவுண்டர், தேவர், நாட்டார், கோனார், மூப்பனார்,நாடார்,படையாட்சி முதலியவற்றுள் ஒன்றாக ஒரு வாலும் நீளும். இதனால் இந்தியரின் உயர்திணைப் பண்பு குன்றி, இக்கால அறிவியல்களை யெல்லாம் மேனாட்டாரே தோன்றி வளர்க்க வேண்டியதாயிற்று. ம.வி.112.

குலவொழிப்புக்கு அரசின் கடன்

1. கலப்பு மணஞ் செய்வார்க்கு மணச் செலவு முழுவதையு மேனும் அதில் ஒரு பகுதியையேனும் ஏற்றுக் கொள்ளுதலும். 2. அவர்க்கு மண முடிந்தவுடன் அவர் தகுதிக்கேற்ப அரசியல் அலுவலளித்தலும்

3. அவர் பெறும் மக்கட்குப் படிப்புதவி செய்தலுமாகும் த.தி.62.

குழந்தை கைப் படைக்கலம்

சட்டசபைக்குத் தகுந்தவரைத் தெரிந்தெடுக்கும் ஆய்வும் அறிவும் இல்லாத கல்லா மக்களின் நேரியுரிமை, குருடன்கைத் தீப்பந்தமும் குழந்தைகைப் படைக்கலமும்போல் உடையார்க்கும் பிறர்க்கும் தீங்கே விளைக்கும்.

ம.வி.35-6.