உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூட்டாட்சி

பாவாணர் பொன் மொழிகள்

295

அரசியற் கொள்கை ஒப்புமைபற்றி, தமிழ்நாடும் திராவிட நாடுகளும் ஒரு வட்டாட்சி அமைக்கலாம். த.வ.முன்.29

கூட்டுடைமை

எல்லாத் தொழிலர்க்கும் எக்காலத்திற்கும் ஏற்றதும் வகுப்பு வேற்றுமையைத் தேற்றுவிக்காததும் உடம்பியற் பண்பாட்டையும் உளவியற் பண்பாட்டையும் ஒருங்கே வளர்ப்பதும் இறைவழி பாட்டை மறுக்காததும் தனியுடைமையை விலக்காததும் பகுத்தறிவிற்கு முற்றும் ஒத்ததும் உயரியதுமான கூட்டுடைமை யாட்சி அல்லது வாழ்க்கை கி.மு. அல்லது கி.பி. முதல் நூற்றாண்டிலேயே திருக்குறள் வாயிலாகத் திருவள்ளுவரால் தெரிவிக்கப்பட்டுவிட்டது. ம.வி.நூ.மு.க.ச.

கைத்தொழிற் பயிற்சி

பள்ளியிறுதித் தேர்வில் தவறியவர்க்கும் குறைந்த மதிப்பெண் வாங்கியவர்க்கும் வெவ்வேறு கைத்தொழிற் பயிற்சியளித்தல் வேண்டும். நாட்டிற் பிறந்த எல்லாரும் வாழ வேண்டுமாதலால் தாமாக ஒரு தொழில் முயற்சியை மேற்கொள்ளாதவர்க் கெல்லாம் அரசே அவரவர் திறமைக்குத் தக்கவாறு பயிற்சியளித்துப் பணியிலும் அமர்த்த வேண்டும்.

கைந்நூலாடை

ம.வி.89.

கதர் என்னும் கைந்நூலாடை ஆங்கிலேயர் காலத் தேசியப் போராட்டத்தில் ஆலை நெசவிற்கும் ஆங்கில ராட்சிக்கும் எதிர்ப்பாகக் காந்தியடிகள் கையாண்ட அரசியல் வலக்காரக் கருவியாதலால், இக்காலத்திற்கு ஏற்காது. காலத்தின் அருமையை உணரச்செய்யாததும், உலகத்தோடொட்ட ஒழுகலை மேற் கொள்ளாததும் அகக் கரண வளர்ச்சியைத் தடுப்பதும் பயன்பாட்டிற் குறைபாடுள்ளதுமான அவ்வாடை நெசவை அரசு ஊக்குதல் கூடாது. ம.வி.77.

கொல்லரைப் பொறிவினையிற் பயிற்றுதல்

ஏமப் பூட்டு, துமிக்கி (Gun) குண்டுக் குழாய் (Cannon) சுழலி (Revolver) முதலிய கருவிகளும் படைக்கலங்களும் செய்யக் கூடிய கொல்லர் இன்றும் நம்மிடையுள்ளனர். அவரைப் பொறிவினையிற் பயிற்றினால் நாளடைவில் மேலையர் போலப் புது நாகரிகக் கருவிகளை யெல்லாம் செய்யக்கூடிய ஆற்றலராவார். ம.வி.78.