உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296

சம்பளத் திட்டம்

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

சம்பளத் திட்ட வகுப்பு கீழிருந்து மேற்செல்ல வேண்டும். மனைவியும் இருபிள்ளைகளுமுள்ள ஓர் ஏவலன் (Peon) குடும்பத்திற்கு இக்காலத்தில் 300 உருபா இல்லாமல் வாழ்க்கை நடத்த முடியாது. ஒரு காவலன் (Constable) நிலைமையும் ஏவலன் நிலைமையை ஒத்ததே. அதற்கு மேற்பட்ட பதவிகட்கெல்லாம் ஐம்பதும் நூறும் இருநூறும் ஐந்நூறும் ஆயிரமுமாக ஐயாயிரம் வரை கூட்டிக்கொண்டே செல்ல வேண்டும். அதற்குமேல் எவர்க்கும் சம்பளமிருத்தல் கூடாது.

சமற்கிருதச் சொற்கள்

ம.வி.111

சமற்கிருதச் சொற்களை நடுநிலையாய் ஆய்ந்து பார்ப்பின் அவற்றுள் ஐந்திலொரு பங்கு மேலையாரியமும், ஐந்திலொரு பங்கு வடவிந்திய முந்துமொழியாகிய முது திரவிடமும், ஐந்திலிரு பங்கு தமிழும், ஐந்திலொரு பங்கு புத்தாக்கமும் ஆகும் என்பது தெளிவாய்த் தெரியும். ம.வி.153.

சூதாட்டொழிப்பு

கிண்டிக் குதிரைப் பந்தயமும் அரசுப் பரிசுச்சீட்டும் சூதாட்டே. அரசு நடத்துவதனால் அவை நல்வினையாகா; வருவாயை நற்பணிக்குப் பயன்படுத்துவதனால் அவை அறவினை யாகா.குதிரைப் பந்தயத்தில் ஒட்டம் ஒட்டிக் கெட்ட குடும்பங்கள் எத்தனையோ பல. ம.வி.183.

தகுதிபற்றிக் கல்வியும் வேலையும்

மாணவர் சேர்ப்பிலும் வேலை யமர்த்தத்திலும் தாழ்த்தப் பட்டவர்க்கு இன்னும் பத்தாண்டு கூட்டக் கூடிய சிறப்புச் சலுகை தவிர ஏனை நிலைமைகளிலெல்லாம் தகுதி (Merit) ஒன்றையே கவனித்தல் வேண்டும்).

தந்தையும் அரசும்

ஒரு குடும்பத்திற் பிறந்த பிள்ளைகட்கெல்லாம் ஊணுடை யுறையுள் அளிக்கத் தந்தை கடமைப்பட்டிருப்பது போன்றே, ஒரு நாட்டிற் பிறந்த குடிகட்கெல்லாம் வேலையும் பாதுகாப்பும் அளிக்க அரசு கடமைப்பட்டுள்ளது. ம.வி.35

தமிழ்நட்டுப் பிராமணர்

தமிழ்நாட்டுப் பிராமணர், இன்று தமிழ்நாட்டாரும் தமிழ் பேசுவோருமாய் இருக்கின்றனரேயன்றித் தமிழராயில்லை.