உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர் பொன் மொழிகள்

297

பரிதிமாற் கலைஞன் போல் தமிழை ஒரே உண்மையான தாய் மொழியாகக் கொள்ளின் முழுவுரிமைத் தமிழராவர். அதுவரை அயலார் போன்றே கருதப்படுவர். த.இ.வ,301

தமிழ் வயிற்றை நிரப்புமா?

வயிறு கொதிக்கும்போது தமிழ் எதற்கு? தமிழ் வந்து வயிற்றை நிரப்புமா? என்று வினவும் மாந்தன் வடிவுகளும் உள. அத்தகைய மாக்களை நோக்கித்தான்.

"செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்

அவியினும் வாழினும் என்”

என்று வெகுண்டு வினவுகின்றார் திருவள்ளுவர்.

தமிழ் விடுதலை

ம.வி.54

கோவில் வழிபாடும் இருவகைச் சடங்குகளும் தமிழில் நடைபெற்றாலொழிய, தமிழ் விடுதலையடைந்து தன் பழம் பெருமையை மீளப் பெற முடியாது. தமிழுயர்ந்தால்தான் தமிழன்

உயர்வான்.

தமிழகக் கட்சிகளெல்லாம் தமிழ்க்கட்சியாதல்

த.வ.340

இங்கிலாந்திலுள்ள மூவேறு கட்சிகளும் தத்தம் கொள்கை குறிக்கோளில் முற்றும் அல்லது மிகவும் வேறுபட்டிருப்பினும் மொழியென்னும் ஒரு செய்தியில் ஒரு கட்சி போன்றே இயங்கும். அத்தகைய பண்பாட்டையே தி.மு.கவும் அ.தி.மு.க.வும் அல்லாத தமிழ் நாட்டுக் கட்சிகளும் மேற்கொள்ளல் வேண்டும். தமிழைப் போற்றாத கட்சி தமிழர் கட்சியுமாகாது. தமிழ் நாட்டுக் கட்சியு மாகாது. த.இ.வ.303 தமிழப்பார்ப்பார்

தமிழப் பார்ப்பார் பண்டாரம், புலவன், குருக்கள் திரு(க்கள்), பூசாரி, உவச்சன், ஓதுவான், போற்றி,நம்பி, அருமைக்காரன், (புடவைக்காரன்), வள்ளுவன் முதலிய பல்வேறு வகுப்பார் ஆவர். பார்ப்பான் கோயிற் கருமங்களைப் பார்ப்பவன்.

தமிழப்பூசாரி

த.தி.2

அந்தணன் ஐயன் என்னும் பெயர்கள் முதன்முதல் தமிழகத் துறவியரையே குறித்தது போன்று பார்ப்பான் என்னும் பெயரும் முதன் முதல் தமிழப்பூசாரியையே குறித்தது.

த.தி.2