உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

தமிழர்க்கு இன்மைகள் பல

எட்டாம் நூற்றாண்டில் வெளிநாட்டினின்று வந்த முகமதியர் சிறுபான்மையரேனும் ஆங்கிலர் நீங்கியவுடன் தமக்கெனக் கோன்மை (Sovereignty) கொண்ட தனிநாடு பெற்று விட்டனரே. நூறாயிரம் ஆண்டிற்கு முன்னமே தோன்றி ஒருகால் நாவலந்தேயம் முழுதும் ஆண்ட பழங்குடி மக்களான தமிழர் ஏன் தம் நாட்டையும் பெறவில்லை?... இதற்குக் கரணியம், முகமதியர்க்குள்ள ஓரின வுணர்ச்சியும் ஒற்றுமையும் மறமும் மானமும் இற்றைத் தமிழருட் பெரும்பாலார்க்கு எள்ளளவும் இன்மையேயாம். த.வ.: மு2

தமிழரசின் தலையாய கடமை

தென்சொற்கட் கெல்லாம் கூறுவதோடு வேர்ப்பொருள் காட்டித் தமிழென விளக்கும் சொற் பிறப்பியல் அகர முதலி இன்றியமையாத தாகின்றது. இதற்கு ஒரு கோடி யுருபா வேண்டினும் ஒதுக்கித் தொகுப்பிப்பது தமிழரசின் மேல் விழுந்த தலையாய கடமையாகும். த.இ.வ.312

தமிழன் பிறந்தகம்

தமிழன் என்னும் இனம் தமிழ்பற்றியதே யாதலால், தமிழ் தோன்றிய இடமே தமிழன் பிறந்தகமாம். அது தென்வாரியில் மூழ்கிப் போன குமரிநாடே.

தமிழில் வழிபாடு

த.வ.12

முருகன் வழிபாடு,சிவன் வழிபாடு, திருமால் வழிபாடு, அம்மன் வழிபாடு ஆகிய நால்வகை வழிபாட்டு முறைகளையும், அவற்றிற்குரிய போற்றி (அர்ச்சனை) களையும் தனித்தமிழில் தொகுத்து, ஓதுவாரைக் கொண்டு திருக்கோவில் வழிபாடு நடத்துவித்தல் வேண்டும். த. .01. 311

தமிழின்சிறப்பு

கூட்டமும் கொண்டாட்டமும் சிறப்பாக நடைபெறு வதனாலேயே தமிழ் சிறப்படைந்துவிட்டதெனக் கருதுதல் தவறாகும். Qg. OLDIT. 3:12:16

தாய்மொழியில் திருமணக் கரணம் செய்தல்:

ஒவ்வொரு தமிழனும் தமிழிலேயே கரணம் செய்வித்தல் வேண்டும்.பிராமணன் தமிழன்பனாகித் தமிழிற் கரணம் செய்ய இசையின் அதை ஏற்றுக்கொள்ளலாம். தமிழிற் கரணம் செய்வியாதவன் தமிழனாகான்.

த.தி57