உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர் பொன் மொழிகள்

தாழ்த்தப்பட்ட மாணவர் விடுதி

299

தாழ்த்தப்பட்டவரைத் தாழ்த்தப்பட்டவரென்று சொல்வதே மானக் கேடாம். அதினும், பிறர் சொல்லாது தாழ்த்தப்பட்டவரே சொல்லிக் கொள்வது தம்மைத் தாமே தாழ்த்துவதாகும். ஆதலால் தாழ்த்தப்பட்ட (அரிசன) மாணவர் விடுதியென்று தனியாக இருப் பதை உடனே நீக்கிவிட்டு மேல்வகுப்பு மாணவர் விடுதியொடு சேர்த்துவிடல் வேண்டும். ம.வி.131

திராவிட முக்கட்சியும் ஒன்றாதல்

மூவாயிரம் ஆண்டு ஆரியத் தடையால் முடங்கிக் கிடந்த தமிழும் தமிழரும் முன்னேறவும், இந்தியை வட நாட்டிற்குத் துரத்தவும், தமிழர் ஒற்றுமைஇன்றியமையாதது ஆதலால் தி.க; தி.மு.க, அ.தி.மு.க. ஆகிய முக்கட்சியும் உடனே ஒன்றாகுதல் வேண்டும். அல்லது ஒன்று சேர்தல் வேண்டும். கட்சித் தலைவர் இனநலம் நோக்கித் தத்தம் பிணக்கை விட்டுவிடுதல் வேண்டும். த.இ.வ.302

திருக்குறள்

எல்லாக் கேடுகளும் பாடுகளும் துன்பங்களும் தொல்லை களும் நீங்கி எல்லாரும் இன்பமாக வாழ வேண்டுமென்னும் இன்னருள் நோக்கம் கொண்டே தெள்ளிய மனமும் ஒள்ளிய அறிவும் திண்ணிய நெஞ்சும் நுண்ணிய மதியும் கொண்ட திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்திருக். மர. முன்.17 திருந்தாமணத்தினும் தீய செயல்

மணமகள் வீட்டார் சீர்திருத்த மணத்திற்கு இசையாமை யாலோ மணமகன் வீட்டார்க்கு அதில் முழு நம்பிக்கை இல்லாமையாலோ வடமொழிக் கரணம் முன்னமே நடந்து விடுகின்றது. அதோடு நிறுத்திக் கொள்வது நல்லது. அங்ஙன் மன்றித் தமிழ்க்கரணமும் செய்து மக்களை ஏமாற்றுவது திருந்தா மணத்தினும் தீய செயலாகும்.

திருமணக் காலம் பார்த்தல்

த.தி.64

உடல் நலத்தையும் வினை வசதியையும் தாக்கும் கோடை மாரி போன்ற கால வேறுபாடும் பகல் இரவு போன்ற வேளை ற வேறுபாடும் அல்லது வேறு வகையில் காலப்பகுதிகளைக் கணித்து வீணாக இடர்ப்படுவதை விட்டு விடல் வேண்டும்.

தி.தி. 55.