உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவ தேவ மொழி

பாவாணர் பொன் மொழிகள்

301

வடமொழி தேவமொழியென்னும் காலம் மலையேறி விட்டது. தமிழ் வடமொழிக்கும் மூலமாதலால் வடமொழியைத் தேவமொழியெனின் தமிழைத் தேவ தேவ மொழியெனல் த.இ.வ.301.

வேண்டும்.

தொடர் வண்டியில் வகுப்புகள்

ஆங்கிலர் போன்ற மேலையர் ஆட்சி இங்குத் தோன்றி யிராவிடின் தொடர்வண்டிகளிற் பிராமணர் சத்திரியர், வைசியர், சூத்திரர், பஞ்சமர் (தீண்டாதார்) என்னும் ஐந்து வகுப்புக் களேயன்றி முதலாவது இரண்டாவது மூன்றாவது என்னும் வகுப்புக்கள் தோன்றியிரா. ஆதலால் குமுகாயத் துறையிலும் ஆங்கிலராட்சி மாபெரு நன்மை செய்ததாகும்.

தொல்காப்பிய விரிவுரை

ம.வி.164.

தொல்காப்பிய வுரைகள் பலவிடத்து வேறுபட்டும் சிலவிடத்து வழுவியும் இக்கால மாணவர்க்கு எளிதாய் விளங் காத நடையிலும் இருப்பதால், இலக்கணப் பெரும் புலவரை யெல்லாம் ஒன்றுகூட்டி ஒரே புதிய திருந்திய விளக்கமான தெளிநடை விரிவுரை வரைவிக்க ஏற்பாடு செய்தல் வேண்டும். த.இ.வ.311.

தொழிலாளர் ஒன்றியம்

ஒரு தொழிலுக்கு ஒரே தொழிலாளர் ஒன்றியம் இருத்தல் வேண்டும். அதுவும் கட்சிச் சார்பற்றதாய் இருத்தல் வேண்டும். ம.வி.81.

தொழிற்சாலையிடம்

தொழிற்சாலைகள் மக்கள் குடியிருப்பிற்கும் கல்வி நிலையங்கட்கும் விளைநிலங்கட்கும் குறைந்தது ஒரு கல் தொலைவிற் கப்பால் இருத்தல் வேண்டும். அல்லாக்கால், அவற்றினின்று வெளிவரும் தீநீராலும் நச்சுப் புகையாலும் நாற்றக் காற்றாலும் மக்கள் நலங்கெடும். மரஞ்செடி கொடிகள் படும்; பயிர் பச்சைகள் விளையா; ஆறு ஏரி கிணறு முதலிய நன்னீர் நிலைகளெல்லாம் உவர்நீராக மாறிவிடும். தோற்பதனீட்டுச் சாலைகள் ஊரருகில் இருப்பவற்றையும் அளவிற்கு மிஞ்சின வற்றையும் உடனே அகற்றிவிடல் வேண்டும், ஆலைக் கழிவு நீரைத் தூய்மைப் படுத்தலையும் மேற்கொள்ள வேண்டும்.

ம.வி.81.