உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302

தோட்டியர் பணி

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

(தோட்டிகட்கு) வீடுதொறும் சலக்கப் புரையில் நரகலை வார்வதும், அதைப்பலர் முன்முறத்திற் சுமந்து கொடுபோய்ப் பறைகளில் கொட்டுவதும், அப்பறைகளைச் சரக்கியங்கிகளில் (Lorries) ஏற்றிக் கொண்டு போய்க் குழாய் நீரடிப்பதுமான அருவருப்பான வேலைகளை அடியோடு நீக்குதல் வேண்டும். இன்றேல் குமுகாயத் (Social) துறையில் அவர் ஒரு காலும் முன்னேற முடியாது. அவரைப் பொறுத்த வரையில் தீண்டாமையும் தொடரும். மாந்தன் நரகலை மாந்தனே வாரிச் சுமக்கச் செய்வது, நாகரிக மாந்தனுக்கும் நாகரிக அரசிற்கும் கடுகளவுந் தகாது. ஒவ்வொரு வீட்டிலும் அடிப்புச் (Flush-out) சலக்கப்புரையே யன்றி எடுப்புச் சலக்கப்புரையிருத்தல் கூடாது.

நகரத் திருமணம்

LD. 9.80

நகரங்களில் நடைபெறும் திருமணங்கட்கு வருவார் பலர் அலுவலாளராய் இருப்பாராதலால், அவர் வசதி நோக்கி, பொது விடுமுறையல்லாத நாட்களில் நடத்தும் திருமணங்களை யெல்லாம் காலை 8 மணிக்கு முன்னாவது, மாலை 4 மணிக்குப் பின்னாவது வைத்துக் கொள்வது நலம்.

நகரமும் நரகமும்

த.தி.55.

நகரம் நரகம் ஆகின்றது. மாநகரமோமாநரகமே - சாலை நடுவிற் சென்றால் வண்டிகட்கு அச்சம்; ஓரத்திற் சென்றால் ஈறுமாறிய நரகத்திற்கு அச்சம். இத்தகைய தீய நாற்றச் சூழலில் தூய காற்று எங்ஙனம் வீசும்? வீசுங் காற்றெல்லாம் வீச்சமன்றோ? ம.வி.61.

நகை வரம்பீட்டு உயர்த்தம்

மேனாட்டினின்று பொற்காசு வரத்தில்லாத இக்காலத்தில் பொற்கொல்லர் முதலீடெல்லாம் நகையே ஆதலால் ஒரு பொற்கொல்லன் குடும்பம் பிழைக்குமளவு வருவாய் வரத்தக்க தொழில் ஒழுங்காய் நடக்குமாறு அவன் நகை முதலீட்டு வரம்பை உயர்த்துதல் வேண்டும்.

நாட்டுப்பணி அமர்த்தம்

ம.வி.80

போக்குவரவு தற்காப்பு வெளிநாட்டுறவு நடுத் தீர்ப்பு என்னும் நாற்பெருந்துறையில்தான் நடுவணரசிற்கு அதிகார முண்டு. ஏனைத் துறைகளிலெல்லாம் நாட்டுப் பணிக்கு நாட்டு மக்களே அமர்த்தப் பெறல் வேண்டும். ம.வி.107.