உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாகரிகம்

பாவாணர் பொன் மொழிகள்

303

நாகரிகம் என்பது நகரமக்களின் திருந்தியவாழ்க்கை. நாகரிகம் என்னும் சொல் நகரகம் என்னும் சொல்லின் திரிபாகும். ஆங்கிலத்திலும் நாகரிகத்தைக் குறிக்கும் இலத்தீனச் சொல் நகரப் பெயரினின்று தோன்றியதே. ப.த.நா.ப.1.

நாகரிகமும் பண்பாடும்

நாகரிகம் என்பது திருந்திய வாழ்க்கை. அது எல்லாப் பொருள்களையும் தமக்கே பயன் படுத்துவது. பண்பாடு என்பது திருந்திய ஒழுக்கம். அது எல்லாப்பொருள்களையும் தமக்கும் பிறர்க்கும் பயன்படுத்துவது. ப.த.ப.நா.8.

நிலக்கொடை

நிலமில்லாதவர்க்கு நிலங்கொடுத்தல் என்பது தவறான திட்டம். இது அமெரிக்காவும் ஆத்திரேலியாவும் போன்ற குடியேற்ற நாட்களில்தான் ஓரளவு இயலும். இனிமேற் பிறக்கும் பிள்ளைகட்கு எங்ஙனம் பெற்றோர் தம் சிறு நிலங்களைப் பாகம்பிரித்துக் கொடுக்க முடியாதோ அங்ஙனமே அரசும் இனிமேல் தோன்றும் உழவர்க்கும் புதிதாக நிலம் ஒதுக்க இயலாது. மேலும் ஆடுமாடு மேய்ச்சலுக்குப் போதிய இடமும் வேண்டும். ம.வி.74.

நிலத்தை மேலும் துண்டுபடுத்தாமை

தமிழ்நாடு மிகப்பழைய நாடு ஆதலாலும் பல்வேறு வெளிநாட்டு மக்கள் இங்குக்குடியேறியிருப்பதனாலும் மக்கட் டொகை மட்டிற்கு மிஞ்சி நன்செய்களும் புன்செய்களும் மனைநில அளவாகக் குறுகியுள்ளன. இவற்றை இனிப் புதல்வர்க்குப் பாகம் பிரிப்பின் பாத்தியளவாக ஒடுங்கும். அதன் செறுவிற்கு (Acre)க் குறைந்த செய்களையெல்லாம் ஒன்றாகச் சேர்த்துக் கூட்டுப் பண்ணையாகப் பயிரிடுவதே தக்கதாம். ம.வி.74.

நினைவுச் சின்னம்

உருவந் தெரியாத திருவள்ளுவர் போன்ற உலகப் பொதுப் பேரறிஞர்களுக்கு ஒவ்வொரு நாட்டிலும் படிமை நிறுவாது நினைவுச் சின்னமே நிறுவுதல் வேண்டும்; அல்லது மாபெரு மணி மண்டபமே எழுப்புதல் வேண்டும்.

ம.வி.147.