உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர் பொன் மொழிகள்

307

திருக்கும்." என்பதே எக்கணியர் கூற்றும். அவ்விரண்டுகள் எவை என்பதும் அவர் அறியார்.

புதுப்புனைவாளரைப் போற்றுதல்

த.தி.56.

இக்காலத்தில் பொன்னும் எண்ணெயும் போன்ற கனிமப் பொருள்கள் இல்லா நாடுகளெல்லாம் புதுப் புனைவுகளாலும் கண்டுபிடிப்புகளாலுமே தழைத்தோங்க முடியும். ஆதலால், அவ்வாற்றலுள்ளாரை வரியும் செல்வ வரம்பும் இடாது அரசு ஊக்குதல்வேண்டும். புதுப்புனைவுகளால் மக்கள் வாழ்க்கை ஏந்தும் (வசதியும்) இன்பமும் பெறுவதால் புதுப்புனைவாளரை யெல்லாம் குல மத கட்சி வேறுபாடின்றி, நாட்டுவளம் பெருக்கிய வராகவும் உலகப் பொதுநலத் தொண்டராகவும் போற்றுதல் வேண்டும். ம.வி.44.

புறமணம் விதிப்பு

ஒரே குலத்துள் தொடர்ந்து மணங்கள் நடைபெறுவதால் விளையுங் கேட்டை விலக்குதற்கே, குலப்பிரிவுகட்குப் புறமணம் விதிக்கப்பட்டதாகத்தெரிகின்றது.

பூங்காப் பொருட்காட்சியகம்

த.தி.13.

ஐந்திணை நிலமும் அறுதிணைப் போரும் பெயர் பெறக் காரணமாயிருந்த பூச்செடி கொடி பூண்டு மரங்களை ஒரு பூங்காவில் வளர்த்துப் பொருட்காட்சியக மாக்கலாம். த. இ.வ. 312 பூச்சி மருந்தடிப்பவர்

நிலத்தை உழும்போது பூச்சி புழுக்கள் கொல்லப் படுவதனால் உயர்ந்தோர் உழவுத்தொழிலைத் தாழ்ந்த தென்று தள்ளிவிட்டனர் என்று மனு 'தருமசாத்திரம்' கூறுவதோ எள்ளி நகையாடத் தக்கதாம். இன்று நன் செய் புன் செய்களிற் பூச்சி மருந்தடிப்பவரெல்லாம் அதன்படி கொலையாளியராவர்.

பெண்டிர் சமன்மை

ம.வி.72.

தமிழர் நாகரிகமும் பண்பாடும் அடைந்து பல்லாயிரம் ஆண்டுகளாகியும் இன்னும் பெண்டிர் சமன்மை ஏற்படாதது பெரிதும் இரங்கத் தக்கதே.

பெண்பரிசம்

த.தி.64.

பெண்ணிற்குப் பரிசம் கேட்பது ஓரளவு விலை கூறுவது போன்றிருத்தலால் செல்வப் பெற்றோர் அதனைக் கேளாதிருத்தல்