உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

பிள்ளைப் பேறில்லாதவர் அஃதுள்வர்முன் உள்ளத்தி லேனும் நாணி வருந்தாவாறு அரசும் பொதுமக்களும் புலவரும் இனி அத்தகையோரையே பாராட்டி வாழ்த்துதல் வேண்டும்.

பிள்ளை வரம்பீட்டில் பால்பற்றிய கருத்து

ம.வி.66.

இருபிள்ளை என்னும் வரம்பீட்டிற் கால் பற்றிய கருத்து கலத்தல் கூடாது. இரு பிள்ளையும் ஆண்பாலாகவும் இருக்கலாம். பெண்பாலாகவும் இருக்கலாம். இருபாலுங் கலந்துமிருக்கலாம், இரண்டும் ஒரே பாலாயிருப்பின் ஏனைப்பாலும் ஒன்று வேண்டும் என்பது பொருந்தாது. அதற்கு இசையின் சிலர்க்குமுப்பிள்ளை யாகி நடுநிலை திறம்பும். மேலும் மூன்றாம் பிள்ளையும் முந்தின பாலாகவே இருக்கலாம். நம் நாட்டில் இன்றும் சாண்பிள்ளை ஆண்பிள்ளை மாண்பிள்ளை என்னும் பழமொழிக் கருத் திருப்பதால் முப்பிள்ளையும் பெண்ணாய்ப் பிறந்த குடும்பம் செல்வஞ் சிறந்திருந்தாலன்றித் தொல்லைப் படத்தான் செய்யும். கோவரசு போய்க் குடியரசு தோன்றியுள்ள இக்காலத்தில் பட்டத கட்டிப் பாராளப் பிள்ளையில்லையென்று வருந்த வேண்டிய தில்லை. மேலும் பெண்பிள்ளைக்கும் பட்டம் கட்டலாம். பிள்ளைகளின் பாலமைப்பு இறைவன் அல்லது இயற்கையேற் பாடேயன்றி, மாந்தன் படைப்பன்று. ஆதலால் எப்பாற் பிள்ளை பிறப்பினும் பொந்திகை (திருப்தி) அடைதல் வேண்டும்.ம.வி.68. பிறப்பிய நம்பிக்கையால் கேடு

பிறப்பியத்திற் குறிக்கப்பட்ட, வாழ்நாள் நீட்சியை நம்பி, நோய் மருத்துவம் செய்யாதும் பேணாதும் இறந்து போனவரும்; ஆக்க நிலையை நம்பி முயற்சி செய்யாது வினை தோற்றாரும், முற்காப்பின்றி ஏற்கெனவே இருக்கும் நிலைமையும் இழந்தாரும் எண்ணிறந்தோராவர்.

பிறப்பியம் பாராமை

த.தி.56.

மணமக்களின் பிறப்பியத்தை (ஜாதகத்தை) நோக்குவதும் தவறாம். மனப் பொருத்தமே பணப்பொருத்தம். அஃதன்றிக் கணிய முறையில் வெவ்வேறு பொருத்தம் பார்ப்பதால், பொருந்தும் மணங்கள் விலக்கவும் பொருந்தா மணங்கள் பொருத்தவும் படுகின்றன. பிறப்பியக் கணிப்புப்படி பெரும்பால் நிலைமைகள் நேர்வதில்லை. ஏதேனும் நேரினும் அது தற் செயலாக நேர்வதே. பிறப்பியத் தவற்றைக் கணிப்புத் தவறென்று கூறுவதும் பொருந்தாது. சரியாய்க் கணிப்பவர் எவருமிலர். “ஐந்திற் கிரண்டு பழுதில்லா