உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர் பொன் மொழிகள்

பரிசுச் சீட்டு நிறுத்தம்

305

ஆசைகாட்டல்,போட்ட பணம் மீளாமை, உழைப்பின்றிப் பிறர் பணத்தால் விரைந்து செல்வராதல், இழப்பால் வருத்தமும் வென்றவன்பாற் பொறாமையும் உண்டுபண்ணல், எத்தனை முறையாயிடினும் எல்லாரும் வெல்ல முடியாமை ஆகிய சூதாட்டியல்புகளுடன், அயல் மாநிலத்திற்குப் பணம் போதலாகிய தீதும் கூடிய பரிசுச் சீட்டுத் திட்டம், தமிழ்நாட்டில் தோன்றிய திருவள்ளுவர் பெயருக்கு இழுக்கு நேரா வண்ணம் உடனே நிறுத்தப் பெறுவதே நன்றாம். தமிழர் வ.352.

பள்ளிப் பதிவேடு

சேர்ப்புப் படிவங்களிலும் பதிவேடுகளிலும் பெற்றோரின் தொழில் தவிர, பிறப்புப்பற்றிய குலப்பெயர்க் குறிப்பு இருத்தல் கூடாது. எல்லோரும் ஓரினம் என்னும் சமவுணர்ச்சியே பள்ளிச்சூழலில் நிலவ வேண்டும். இங்கு மாணவ மாணவியருக்குச் சொன்னதே ஆசிரியர்க்கும். ம.வி.87.

பன்றிவளர்ப்பு

நாட்டுப் புறத்திலும் நகருள்ளும் நரகலைத் தின்று வாழும் பன்றிகளை வளர்ப்பவரை அரசு தண்டித்தலும் அவ் வளர்ப்பை உடனடியாக நிறுத்துதலும் வேண்டும். வெண்ணிறமான மேனாட்டுப்பன்றியினத்தைக் கிழங்கும் கொட்டையும் இட்டு வளர்க்கும் பண்ணைகளை அரசு ஊக்குவதுடன் தானும் அத் தொழிலை மேற்கொள்ளலாம். காட்டுப்பன்றியாயின் நாட்டுப் பன்றியும் நன்றாம். ம.வி.75.

பிள்ளைப் பேறில்லாதவரைப் பாராட்டுதல்

பிள்ளைப் பேறு பண்டை நல்வினைப்பயன் அல்லது திருவருட்பயன் என்றும் பிள்ளைப் பேறின்மை பண்டைத் தீவினைப் பயன் அல்லது இறைவன் சாவிப்பு (சாபம்) என்றும், பிள்ளைப் பேறே செல்வத்துட் செல்வமென்றும், அஃதில்லாதார் ஓர் எரி நரகை அடைவரென்றும் பலதவறான நம்பிக்கைகள் இன்னும் ஒரு சார் மக்களிடையேயிருந்து வருகின்றன. இவற்றுள் ஒன்றைக்கரணியமாகக்கொண்டும் தம் - பெண்ணின்ப நுகர்ச்சியை மிகுத்தற் பொருட்டும், தம் முதல் மனைவியின் இசைவைப் பெற்றோ பெறாதோ சிலர் மறு மணமும் செய்துள்ளனர்.