உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர் பொன் மொழிகள்

309

ஆகவே, விளைப்பான், விற்பான், அரசு ஆகிய மூவரும் சேர்ந்தே பொருள் விலையிறக்கப் புதிரை விடுத்தல் வேண்டும்.ம.வி.86. பொருளியல் நூலுக்குமாறான குற்றம்

உறவினரும் நண்பரும், மணமக்கள் ஏழையராயும் திருப்பிச் செய்ய இயலாதவராயும் இருந்தால்தான் அவர்க்குப் பரிசும் நன் கொடையும் வழங்கல்வேண்டும். செல்வராயிருப்பின் தேவையில்லை. பெருஞ்செல்வராயிருப்பின் வழங்கவே கூடாது.அவர்க்கு வழங்குவது பொருளியல் நூலுக்கு மாறான பெருங்குற்றம். தி.தி.61

பொறிவினை நலப்பாடு

பொறிவினையால் மக்கட்கு மட்டுமன்றி மாடு, கழுதை, குதிரை, கோவேறு கழுதை, ஒட்டகம், யானை முதலிய விலங்கு கட்கும் நன்மையுண்டாகிறது. இயற்கையாகக்காட்டில் முழுவுரிமை யுடன் மகிழ்ந்துலவித் திரியும் விலங்குகளைப் பிடித்துச் சிறைப் படுத்தி இரவும் பகலும் வேலை வாங்கி, விடுமுறையும் விடுதலையு மின்றி வாழ்நாள்முழுதும் வருத்துவதால் அவற்றிற்கு ஏற்படக் கூடிய மனநிலையை நாள் தோறும் கடுமையாய் உழைத்து ட்டவுணவையுண்ணும் வாழ்நாட் கடுஞ்சிறை யாளி தான் உணர முடியும். ம.வி.85

பொறிவினைப் புறக்கணிப்பு

பொறிவினைத் தொழில் இறைவனருளால் மாந்தனுக்கு ஏற்பட்ட அறிவு வளர்ச்சியின் பயனே. இதைப் புறக்கணிப்பது மாந்தனை அஃறிணைப்படுத்துவதும் இறைவனை நேரல்லா வழியிற் பழிப்பதுமாகும்.

எல்லா வகையிலும் பொறிகளைப் பயன்படுத்திக் கொண்டு அவற்றைப் பழிப்பவர் ஏமாற்றுக்காரருள் முதல் வகுப்பின ரேயாவர். ம.வி.83

மக்கள் திட்ட ஈகியர்க்குச் சலுகை

மணவாமை, பிள்ளை பெறாமை,மலடாக்கம் செய்து கொள்கை முதலிய ஈகம் (தியாகம்) செய்யும் ஈகியர்க்கு அவரவர் விட்டுக்கொடுப்பின் அளவிற்குத் தக்கவாறு வேலையளிப்பு, வீடமைப்பு, கடனீக்கம், வரிக் குறைப்பு, பணவுதவி, இலவச மருத்துவம் முதலிய பல்வேறு வகையில் அரசு சலுகை காட்டுவது அவர்க்குச் செய்யும் கைம்மாறும் பிறர் அவரைப் பின் பற்றச் செய்யும் தூண்டுகோலுமாகும். ம.வி.69.