உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

மணமக்கட்குப் பார்க்க வேண்டிய பொருத்தங்கள் :

1. காதற் பொருத்தம் 2. உடல் நலப்பொருத்தம்

3. ஒழுக்கப் பொருத்தம். 4. கருத்துப் பொருத்தம் 5. உண்டிப் பொருத்தம் 6. அகவைப் பொருத்தம் 7. உருவப் பொருத்தம் 8. கல்விப் பொருத்தம் 9. முறைப் பொருத்தம் 10. வினைத்திறப் பொருத்தம். 11. தொழிற் பொருத்தம் 12. குடும்பநிலைப் பொருத்தம். த.தி.43.8

மணவகவையுயர்த்தம்

முதற்கண் ஆடவர்க்கு 25-உம் பெண்டிர்க்கு 20-உம், பின்னர் முன்னவர்க்கு 30. உம் பின்னவர்க்கு 25-உம் மண அகவையை உயர்த்துதல் வேண்டும். ம.வி.65.

மணவாண்டு குறிப்பு

எவ்வாண்டிலும் எம்மாதத்திலும் எந்நாளிலும் மணஞ் செய்யாவாறு முதற்கண் ஐயாண்டிற்கும் பின்னர்ப் பத்தாண்டிற்கும் ஒரு முறையே மக்கள் மணஞ் செய்யுமாறு அரசு மணவாண்டு குறித்தல் வேண்டும். நன் மாதமும் நன்னாளும் பார்ப்பார்க்கு ஓராண்டு போதும். இது திருமண ஒத்தி வைப்பு.

மணவாமை போற்றல்

ம.வி.66

கன்னித்

மக்கட் டொகையை ஒடுக்குதற்கு அரசு துறவியராகவும் (confirmed bachelors) தனிவாழ்க்கையராகவும் (Celibates) வாழப், பூட்கை கொண்டவரைப் பாராட்டுதல் வேண்டும்.

மணவாளன் பரிசம்

ம.வி.65.

பெண்ணிற்கு (ப் பரிசம்) கேட்பதற்குப் பதிலாக மணவாளப் பிள்ளைக்குக்கேட்பது இயற்கைக்கு மாறான தாயும், எக் காரணத்தாலும் சரிமைப்படுத்த முடியாததாயும், இருக்கின்றது. இவ்வுலகத்தில் ஒருவன் பெறக்கூடிய பேரின்பப் பேறு பெண்ணே. அகத்தழகும் புறத்தழகும் ஒருங்கேயமைந்த அருமைப் பெண்ணிருக்கவும் அவளை விட்டுவிட்டுக் காசிற் காசைப் பட்டு அழகிலியை மணப்பது இல்லற இன்பத்தையும் வாழ்க்கை சதியையும் பணத்திற்கு விற்பதுபோன்றதே. த.தி.51.