உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதம்

பாவாணர் பொன் மொழிகள்

311

மதம் என்பது இம்மை மறுமை கடவுள் என்னும் மூன்றையும்பற்றி ஒருவன் மதித்துக்கொள்ளும் கருத்தேயன்றி

வேறன்று.

மதம் அழிபடாது

ம.வி.46

கனவு காணாது உறங்கும் நேரம் தவிர, மற்றெல்லா நேரத்திலும் இருப்பினும் நடப்பினும் வேலை செய்யினும் உரையாடினும் உண்ணினும் இறைவனை நினைக்கவும் வழுத்தவும் வேண்டவும் இயலுமாதலின் மனம் உள்ளவரை மதத்தை ஒருவராலும் அழிக்க முடியாதென அறிக.

மதம் மக்கள் முன்னேற்றத்திற்கு அடிப்படை

த.ம.191.

ஒரு நாட்டில் அல்லது ஊரில் கொலை களவு கொள்ளை கற்பழிப்பு முதலியன பெரும்பாலும் இல்லா திருப்பதற்கு அரசன் அல்லது அரசு தண்டிக்கும் என்னும் அச்சமேயன்றி வேறொன்றும் கரணியமன்று. அங்ஙனமேபலர் தீயொழுக்கத்தைவிட்டு நல்லொழுக்கத்தை மேற்கொண்டிருத்தற்கும் மறுமையில் இறைவன் எரி நரகில் இட்டும் தண்டிப்பான் என்னும் அச்சமே கரணியமாகும். பண்பாடின்றி மக்கள் முன்னேற முடியாது ஆதலால் மதம் மக்கள் முன்னேற்றத்திற்கு அடிப்படையேயாகும். ம.வி. 45. மதஇயக்கம்

கூட்டு வழிபாடும் ஓய்வு நாளில் அல்லது நேரத்தில் பொது விடத்தில் அல்லது ஒருவர் இல்லத்தில் பலர் கூடிச்செய்யலாம். இங்ஙனம் எளியமுறையில் அரசிற்கு எவ்வகை இடர்ப்பாடும் விளைக்காது இயங்கக் கூடியது மதம். ம.வி.46.

மதுவிலக்கு

மதுவிலக்கு நல்லதே. ஆயின் அதற்கும் சில விலக்குண்டு. உழைப்பாளி, பிள்ளை பெற்ற பெண்டு, நோயாளி,அயல் நாட்டார் ஆகியோர்க்கு மது மிகத் தேவையானதே. ம.வி.136 மரமடர்ந்த காடு

ஒரு வெப்ப நாட்டில் ஆண்டுதோறும் ஒழுங்காக மழை பெய்தற்கு முக்காற் பங்கு மரமடர்ந்த காடு இருப்பது தலை; 2.3. பங்கு இருப்பது இடை; 1.2 பங்கு இருப்பது கடை. இன்றோ 1.3 பங்குமில்லை. ம.வி.59.