உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312

மலடாக்க அச்சம்

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

இந்தியா பல்வேறு நாடும் இனமும் குலமும் மதமொழி கட்சிதொழில் நிலைமைபற்றிய வகுப்புக்களும் கொண்ட உட்கண்ட மாதலால். மலடாக்கத்தை விருப்பத்திற்கு விடின், சிலகுலம் அல்லது வகுப்புவரவரச் சிறுகவும் சிலகுலம் அல்லது வகுப்பு வரவரப் பெருகவும் நேரும். இது நடுநிலைக்கு இழுக்காம்; நாட்டு வளர்ச்சிக்கும் இந்திய ஒன்றிய முன்னேற்றத்திற்கும் முட்டுக்கட்டையாம். ஆதலால் அணுவளவும் அஞ்சாதும் ஒருவகுப்பார்க்கும் கடுகளவும் கண்ணோட்டம் காட்டாதும் அரசு, தன் கடமையை நிறைவேற்றல் வேண்டும். அஞ்சுவது கோழைத்தனத்தையும் ஆளுந் தகுதியின் மையையும் ஓரவஞ்சகத் தையுமே காட்டும். ம.வி.67.

மலடாக்கம் பொதுமை

மலடாக்கம் குடிசை வாணர் முதல் கோடிச் செல்வர் வரை குல மத கட்சி தொழில் நிலைமை வேறுபாடின்றி, எல்லார்க்கும் பொதுவாயிருத்தல் வேண்டும். ஓர் எளிய ஏவலன் மனைவியும் இந்தியக் குடியரசுத் தலைவர் மனைவியாரும் இவ்வகையில் ஒன்றே. இந்நடுநிலை தவறின் அரசு, அரசாகாது. கூட்டுடைமை அரசே அரசென்று கொள்ளற் கிடமாகும்.

மலடாக்கம்

LD. 9. 66

பிள்ளைபெறுவது பெண்ணேயாதலால், மலடாக்கம் பெண்டிர்க்குச் செய்தாலும் போதும். கட்டாய மலடாக்கச் சட்டம் ஆட்சிக்கு வருமுன்னரே இருபிள்ளையும் பல பிள்ளையும் பெற்றிருக்கும் தாய்மார்க்கெல்லாம் உடனே மலடாக்கம் செய்து விடல் வேண்டும்.

இரு பிள்ளை பெற்றிருக்கும் இளம் கைம்பெண்டிர்க்கும் மலடாக்கம் செய்துவிடல் வேண்டும்.

மலடாக்கமும் மதமும்

ம.வி.68.

மதச் சார்பாக எவர் தடை நிகழ்த்தினும் அரசு ஒப்புக் கொள்ளுதல் கூடாது. எல்லா உயிரினங்களும் இறைவன் படைப்பே. ஆயினும் மாந்தன் தனக்கு வேண்டியவற்றை மட்டும் வைத்துக் கொண்டு வேண்டாதவற்றை விலக்கி விடுகின்றான். வேண்டிய வற்றையும் தன் தேவைப்படி வெவ்வேறளவில் வைத்திருக்கின்றான். தலைமுடி பெண்டிர்க்குப் போல் ஆடவர்க்கும் நீண்டு வளர்வது