உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர் பொன் மொழிகள்

313

இயற்கையே. இறைவனேற் பாடே. ஆயினும் ஆடவன் தன் தலைமுடியை விரும்பியவாறெல்லாம் மட்டுப்படுத்திக்

கொள்கின்றான். இனி, தாடியும் மீசையும் ஒக்க வளரினும் முன்னதை நீக்கிவிட்டுப்பின்னதைப் பேணுகின்றான். இச்செயல்கள் இறைவன் ஏற்பாட்டிற்கு எதிர்ப்பாகா. இங்ஙனமே, மண்ணுலகில் இறைவனைப் படிநிகர்க்கும் அரசும், காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்றவாறு மக்கட்டொகையை மட்டுப்படுத்துவதும் உண்மையான மதத்திற்கு மாறாகாது. ம.வி.67.

மாணவரும் அரசியற் கட்சியும்

மாணவர் கல்வியிலேயே முழுக்கவனத்தையும் செலுத்த வேண்டிய பயிற்சியாளராயும் தத்தம் திறமைக்கும் மனப் பான்மைக்கும் ஏற்பப் பிழைப்பு வழி தேடும் முயற்சியாளராயும், பட்டறிவும் அகக்கரண வளர்ச்சி நிறைவும் பெறாத இளம் பருவத்தாராயும் இருப்பதால் அவர் அரசியற் கட்சிகளிற் சேர்தலோ சேர்க்கப்படுதலோ கல்வி நெறிக்கு மாறும் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையும் ஆன கேடாகும். இதைக் கல்வியமைச்சன்மார் கண்டித்துத் தடுக்க வேண்டியிருக்க அதற்கு மாறாக அதை ஊக்குவது வேலியே பயிரை மேய்தல் போன்றாம். தமிழர் வ. 353. மாணவர் வேலை நிறுத்தம்

குலச்சார்பாகவும் மதச்சார்பாகவும் கட்சிச்சார்பாகவும் இடச்சார்பாகவும் கருத்துச் சார்பாகவும் மாணவர் கூடிக் கொண்டு வேலை நிறுத்தம் செய்வதும் உண்ணா நோன்பிருப்பதும் மறியல் செய்வதும் ஆசிரியரை முற்றுகை யிடுவதும் அவரைப் பழிப்பதும் தாக்குவதும் கல்வி நிலைய உடமைகட்குச் சேதம் விளைப்பதும் மாணவர் மாண்பிற்குத்தகாத கல்லா மக்கள் கயமையாகும். ம.வி.91.

மொழிபெயர்ப்பும் புதுச்சொற்புனைவும்

குறியீடுகளையெல்லாம்

மேலையறிவியல் கம்மியக் மொழிபெயர்க்கவும் அவ்வப்போது வேண்டிய புதுச் சொற்களைப் புனையவும் அறிவியல் திறவோரும் தனித் தமிழ் வல்லுநரும் கொண்டு ஒரு நிலையான குழுவை அமர்த்தல் வேண்டும்.

த. வ.311