உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

யாழ்ப்பாணம் தனிநாடு

ஆங்கிலர் நீங்கும் வரை யாழ்ப்பாணம் தனிநாடாக ருந்தமையால் அந்த நிலைமை மீளவேண்டும். இன்றேல் தமிழும் சிங்களத்தோடொத்த ஆட்சி மொழியாதல் வேண்டும். ம. வி. 202 வணி இடைஞன் வேண்டா

விளைப்பானுக்கும் விற்பானுக்கும் இடையில் மொத்த விலைஞன் அல்லது அரசு தவிர வேறோர் இடைஞனும் இருத்தல் ம.வி.86.

கூடாது.

வரிசையறிதல்

ஒரு புலவரைக் குன்றச் சிறப்பித்தல் போற்றாமையின் பாற்பட்டதே.

வழிபாட்டொழுங்கு

செ.செ.54:455

1. கோவில் வழிபாடு தமிழிலேயே நடைபெறல்.

2. அவ்வம் மத நம்பிக்கையும் தெய்வபத்தியும் கல்வித் தகுதியும் பணிப்பயிற்சியும் தூய வொழுக்கமும் உள்ள பலவகுப்பாரும் பூசகராக அமர்த்தப்பெறல்.

3. பூசகர் பதவியிலும் கையடைஞர் (Trustees) பதவியிலும் தொடர் மரபு (Hereditariness) நீக்கப் படல்.

4. அறிஞரும் ஆராய்ச்சியாளரும் அறிக்கையாளரும் உயர்பதவியாளரும் பெருமக்களும் அரசரும் திருவுண்ணாழிகை அல்லாத கோவிலகத்துட் புகவுச் சீட்டுப் பெற்றுப் புகவிடல்.

5.பெருங்கோவில்களின் வருமானத்தில் ஒருபகுதியைப்

பொதுநலப்பணிக்குச் செலவிடல்.

6. அறநிலையப் பாதுகாப்புத் துறையமைச்சர் கட வுள் நம்பிக்கையுடையவராயிருத்தல்.

7.உருவிலா வழிபாட்டைப் படிப்படியாகப் பொது மக்களிடைப் புகுத்தல்.

வழியறியா வழிகாட்டி

த.ம.194.5

அறிவும் ஆற்றலுமில்லாத தற்குறிகளும், சிற்றறிவினரும் சட்டசபையராகி, பேரறிஞரையும் பெரியோரையும் ஆளும்