உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர் பொன் மொழிகள்

315

சட்டஞ் செய்வது, பிறவிக் குருடரும் புரை படர்ந்த கண்ணரும் கூர்ங் கண்ணருக்கு வழிகாட்டுவதையே ஒக்கும்.

வள்ளுவர் கூட்டுடமை

LD. 09.36

ஒரு குடும்பத்திற் பிறந்த எல்லார்க்கும் எங்ஙனம் திறமைக்குத் தக்க பணியும் தேவைக்குத் தக்க நுகர்ச்சியும் உண்டோ, அங்ஙனமே ஒரு நாட்டிற் பிறந்த எல்லார்க்கும் இருத்தல் வேண்டும். இதுவே பாத்துண்டல் என்னும் வள்ளுவர் கூட்டுடமை.

வாழ்க்கைக் குறிக்கோள்

ம.வி.109.

இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் ஒரு சிறிதேனும் இன்பமாய் வாழ விரும்புவதாலும், அவ்வின்பத்திற்கு இன்றிய மையாது வேண்டுவது பொருளாதலாலும், அப் பொருள் பெற்றார் செய்ய வேண்டிய கடமை அறமாதலாலும் இம்மையில் மக்கள் வாழ்க்கைக் குறிக்கோள் இன்பமும் பொருளும் அறமும் என மூன்றாகக் குறித்தனர் முன்னோர். த.தி. முன். 1

வாழ்நாள் நீடித்தல்

திருவருள், பெற்றோர் உடற்கட்டு, நல்லுணவு, உடற்பயிற்சி, அகமலர்ச்சி, கவலையின்மை, சினமின்மை, நல்லொழுக்கம், அறிவுடைமை, வரம்புகடவாமை முதலியவற்றாலேயே மக்கள் வாழ்நாள் நீடிக்கும் என்பதை அறிதல் வேண்டும். த.தி.55.

வானத்து மீனுக்கு வன்தூண்டில்

கடல்கோட்கு எஞ்சியுள்ள இற்றைத் தமிழ்நாட்டிற் கிறித்துவிற்குப் பிற்பட்டகோவிற் கல்வெட்டுக்களில் தொல் பொருட்டுறைச் சான்று காண முயல்வது வானத்து மீனுக்கு வன்தூண்டில் இட்ட கதையாகவே முடியும். தமிழ்நாட்டு வரலாற்றிற்குத் தொல்பொருள் ஆராய்ச்சித் துறை இம்மியும் பயன்படா தென்பதை அறிதல் வேண்டும்.

வீண்செயல்

LD. 09. 1.

படிமைமேற் படிக்கணக்காய்ப் பாலைக் கொட்டுவதும், பெருங்கலத்திற் கலக்கணக்காய் நெய்யை வார்த்து விளக் கெரிப்பதும் போன்ற வினைகளே பொருளழிப்பும் வீண் செயலுமாகும்.

ம.வி.46