உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316

வீடமைப்பு

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

உழவர் வீடுகளும் ஆயர் வீடுகளும் தொழிற்சாலைகளும் தவிர ஏனையோர் வீடுகளெல்லாம் மேனோக்கியன்றிப் பக்கவாட்டில் விரிவடைதல் கூடாது.

வீடுகட்டும்திட்டம்

ம.வி.145

வான்

வீடு கட்ட நிலப்பரப்பைப் பயன்படுத்தாது வெளியையே பயன்படுத்தி வானளாவிகள் (Sky crapers) எழுப்ப வேண்டும்.நிலப்பரப்பைப் பயன்படுத்தின் பழனங்களையும் ஏரிகளையும் விட்டு விட்டுப் பாறை நிலத்திலும் கல்லாங் குத்திலும் முரம்பு மேட்டிலுமே கட்ட வேண்டும். விளைநிலங்கள் என்றும் விளை நிலங்களாகவேயிருத்தல் வேண்டும். தமிழர்வ.353

வேலை நிறுத்தம்

தக்க கரணியம் இருந்தாலன்றி வேலை நிறுத்தம் செய்தல் கூடாது. மேலாண்மையோடு ஏதேனும் பிணக்கு நேரின், முதற்கண் தொழிற்றுறையில் வல்லாரிடத்தும், பின்னர்த் தொழிற்றுறை யமைச்சரிடத்தும் முறையிடல் வேண்டும். அவ்விருவராலும் தீராவிடின் பின்னர்ப் பொதுமக்களிடம் முறையிடுதல் போல் முந்நாட்குமுன் தெரிவித்து, அமைதியாகவும் வன்செயலின்றியும் தனிப்பட்டவர் உடமைக்கும் அரசுடமைக்கும் சேதம் விளைக்காதும் ஊர்வலமும் கூட்டமும் நடத்தி வரல்வேண்டும், சில நாட்குள் ஏதேனும் ஓர் ஒழுங்கு ஆகத்தான் செய்யும்.

ம.வி.81.