உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர் உவமைகள்

323

ஒரு சில உவமைகள் சிலரை ஆட்படுத்தி அல்லது வயப்படுத்திப் பல்கால் வழங்குமாறு செய்ய வல்லன. அவ்வகையில் பாட்டன், பேரன், தாய், தந்தை மக்கள் என்னும் முறைப் பெயர்கள் பாவாணர் உவமைகளில் மிகப் பேரிடம் பெற்றுள்.

பக்கம் 1, 5, 13, 15, 16, 20, 22, 33, 40, 41, 43, 61 ஆகியவற்றைப்

பார்க்க.

அடிமணை (20, 24) மணிநோட்டம் (31) விண்ணக மீன் (4, 35) பால் (2, 19) என்பவை ஒருமுறைக்கு மேல் பயன் கொள்ளப் பெற்றுள.

ஒருபொருளுக்குப் பலவுவமை கூறுதல் முதற்பக்கத்திற் காணலாம். ஓருவமை பலபொருளுக்கு ஆதல் பெயரன் பாட்டன் (13,15,16, 20, 22, 33) என்பவற்றில் காணலாம்.

இரட்டுறல் பொருள் வருமாறு உவமையமைத்தலைக் 'கூற்றும் கூற்றும்' (6) காட்டும்.

உவமையில் தொன்மச்சுட்டு (புராணக்குறிப்பு) உண்மை, "எத்தனையோ தென் சொற்கள் வடமொழிச் சென்று வாழ்கின்ற. அவை நளராங்காலமும் நண்ணும்" என்பதால் விளங்கும்.

பாம்பு தீண்டுதலால் உருமாற்ற முற்ற நளன் தேரோட்டியாகத் தன் பெயரை வாகுகன் என வைத்துக கொண்டதும், பின்னே, கலியின் எல்லை முடிந்த காலை, மீளவும் நளனாகியதும் ஆகிய நளன் கதைச் செய்தி இவண் சுட்டப் பெற்றதாம்.

தென் சொற்கள் வடசொற்களாக உருமாறியதும், மூலமொழியாய்வுத் தலைப்பாட்டால் அவ்வுருமாற்ற வடசொற்கள் மீளவும் தமிழ்ச் சொற்களாக மாற்ற முற்றுவருவதும் ஆகிய மீட்பு நிலை கருதின் இவ்வுவமையின் அருமையும் ஆழமும் புலனாம்.

பாவாணர் வரிசையில் முதன் முதல் வெளிப்பட்டது 'பாவாணர் கடிதங்கள்' என்பது. அடுத்து இதுகால்வருவது 'பாவாணர் உவமைகள்' என்னும் இச் சுவடி அடுத்து வெளிவர இருப்பவை. 'பாவாணர் பொன்மொழிகள்' பாவாணர் வேர்ச் சொற்சுவடி என்பவை. பாவாணர்பாடல்கள் பாவாணர் மடல்கள்