உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

"தோல் தமிழகத்தாயினும் அதனாற் செய்யப்படும் பாதக்கூடு மேனாட்டதே. அங்ஙனமே மூலம் தமிழாயிருப்பினும் சொல்லளவில் சிலவட சொல்லே"

'இற்றைத் தமிழிலக்கியத்திற்கு ஆணியாய் இருப்பதும், தமிழன் தான் இழந்த உரிமைகளைப் பெறுவதற்கு ஆவணம் போல் உதவுவதும் தொல்காப்பியம் ஒன்றே"

"பொன்னாடை போர்த்தினால் என்வருத்தம் மிகும் என்று சொல்லியிருந்தேன், அதுவுமன்றிப் பன்னாடை போர்த்தியது என் மனக்குறையைப் பன்மடங்காக்கியது."

"நானும் என் மனைவியும் ஒருயிரும் ஈருடலுமாக இருந்தோம். அவர் பிரிவு என்னாற் பொறுக்குந் தரமன்று.'

கடிதங்களிலேயே

இத்தகு உவமைகளை

எழுதும் பாவாணர், தம் கட்டுரைகளிலும் நூல்களிலும் எழுதியுள்ள உவமைகள் பலப்பலவாம். கூடிய அளவும் முயன்று தொகுக்கப் பட்டதே இத்தொகுப்பாம். இதில் விடுபாடுள்ளனவும் அருகிய அளவில் இருக்கலாம். கட்டுரைகளின் முழுமையான தொகுப்பும் கைப்படின் உவமைத் தொகுப்பும் முழுமையுறும் என்பது வெளிப்படை.

பொருள் ஒழுங்கு கருதி இவ்வுவமைகள் எண் பகுப்பில் அமைக்கப்பட்டுள். இவ்வொழுங்கு ஒருசார் பொருந்துவ தாகவும் இருக்கலாம்; பிறிதோரிடத்து இணைக்கத்தக்கதாகவும் இருக்கலாம்; எனினும், வெளிப்பட விளங்கும் இயைபு பற்றியே ஒழுங்குறுத்தப்பட்டுள என்பது தகும்.

இனி, இந்நூலில் இடம் பெற்றுள உவமைகள் 212. கடிதங்களிலிருந்து இம்முன்னுரையில் மேலே எடுத்துக் காட் டியவை 9. ஆக, 221 உவமைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள.

இவற்றுள், ஏழாம் பகுதியாக வரும் பொருள் விளக்கம் பற்றிய உவமைகள் 31. இவை அகரவரி முறையில்வைக்கப் பெற்றுள. மற்றவை பொருள் ஒழுங்கு முறையில் வைக்கப்பெற்றுள.