உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர் உவமைகள்

321

சொல்ல எடுத்துக் கொண்டதற்குக் கூறும் ஒப்புப் பொருள் எதுவோ அது, உவமை.

இரண்டற்கும் பொதுவாய் அமைந்த தன்மை எதுவோ அது, பொதுத்தன்மை

இரண்டை இணைக்கப், போல, ஒப்ப, அன்ன, முதலான வற்றுள் வருவதொன்று எதுவோ அது, உவமை உருபு.

இந்நான்கனுள் முன் மூன்றும் உவமையுள் கட்டாயம் இருத்தல் வேண்டும். இறுதியதொன்றும் வெளிப்படாமல் மறைந்திருத்தலும் உண்டு. ஆயினும், பொருள் விரிக்குங்கால் இயல்பாக அது வெளிப்படுவதாக இருக்கும்.

உவமை என்பதன் பொதுச் செய்தி சிலவற்றை இது காறும் அறிந்தோம். இனிப் பாவாணர்தம் உவமையாட்சி பற்றிச் சில குறிப்புகளைக் காணலாம்.

சிறு சிறு கட்டுகளாகக் கட்டிச் சேர்க்காதும் ஒரு பெருங்கட்டாகக் கட்டாதும் மாங்காயும் தேங்காயும் போல் அனுப்பிவிட்டார்.

ஆங்கிலநூல்2-ஆம் உலகப்போரை ஒழித்த அணுக்குண்டைப் போல் பிராமணியத்தை அடியோடு ஒழிப்பது

"தமிழியக்கம் வேறு; உ.த.க. வேறு, (அதன்) முயற்சி யானையைப் பூனை எதிர்ப்பது ஒத்ததே”

"மொழித்துறையை மதத்துறையினின்று

பிரிப்பது,

உலகியலை மதவியலினின்று பிரிப்பது போன்றதே; கடவுளை நம்புகின்றவர் செய்கின்ற ஒவ்வொரு வினையும் அவனருளை முன்னாடியே செய்யப் பெறுவதால் வாழ்க்கை முழுவதும் ஈரியலும் அகங்கையும் அகங்கையும் புறங்கையும் புறங்கையும் போல் ஒன்றியே நிகழ்கின்றன."

பாரிமீது மூவேந்தரும் பல்வேளிரும் போன்று திரு. கிருட்டிணனார் மீதும் சிங்கைத் தமிழ்ச் செல்வரும் அழுக்காறு கொண்டுள்ளனர் போலும்