உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

உவமைகள் ஒரோ ஒரு பொருளான் அன்றி இரண்டும் மூன்றும் கொண்டு பாராவோ எனின் வருதல் உண்மையால், விரவியும் வரூஉம் மரபின என்ப என்றார் தொல்காப்பியர்.

'தேன்மொழி' என்றால் தேன்போலும் இனிய மொழி என்னும் இனிமைத் தன்மை ஒன்றுமே உவமையாயிற்று. தேன் இனிமையாவதுடன் கூட்டமும் மருந்துமாம்பயனும் செய்தலின் அத்தகு பயன் செய்யும் மொழி எனின், பண்பும் பயனும் ஆகிய இருவகை ஒப்புடைய தாயிற்றாம். இவ்வாறே இவ்வாறே பலவகை ஒப்புடையதாக உவமை வருவதும் உண்டு.

இனி, ஒரு பொருளோடு ஒரு பொருளும், ஒரு பொருளோடு பலபொருளும், பலபொருளோடு ஒரு பொருளும், பொருளோடு பலபொருளும் உவமையாக வருவதுண்டு.

"பண்பும் தொழிலும் பயனும் என்றிவற்றின்

ஒன்றும் பலவும் பொருளோடு பொருள் புணர்த்

தொப்புமை தோன்றச் செப்புவ துவமை.

என்பது தண்டியலங்காரம் (31)

"செவ்வான் அன்ன மேனி"

என்பது ஒரு பொருளோடு ஒரு பொருள்.

"இலங்கு பிறை அன்ன விளங்குவால் எயிறு”

என்பது ஒரு பொருளோடு பலபொருள்

"பீடின்மன்னர் போலவாடை'

என்பது பலபொருளோடு ஒரு பொருள்.

“சுறவினத்தன்ன வாளோர்"

என்பது பலபொருளோடு பலபொருள்.

சொல்ல எடுத்துக் கொண்டது எதுவோ அது, பொருள்.

பல