உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

"தமிழே திரவிடத்தின் தாயும் ஆரியத்தின் மூலமும் என்னும் உண்மையை உலகறிய நாட்டற்கு வேண்டிய வாறெல்லாம் என்னைத் தகுதிப் படுத்தி வருகின்றேன். இன்னும் ஐந்தாண்டிற்குள் அது நிறைவேறிவிடும் என்பது என் நம்பிக்கை””

மறைமலையடிகளின் குறிக்கோள், தமிழைப் பிற மொழிச் சொற்கலப்பின்றி முழுத் தூய்மையாகப் பேசவும் எழுதவும் வேண்டும் என்பதே. அதை அவர்கள் நிறைவேற்றி விட்டார்கள். அதனாற் பெரும்பயன் விளையாது. சமஸ்கிருதம் தேவமொழி என்று திருக்கோயில் வழிபாட்டு மொழியாக இருக்கும் வரை, தமிழுக்கு வளர்ச்சியோ முன்னேற்றமோ இராது; "என் குறிக்கோள் தமிழைத் திரவிடத் தாயாகவும் ஆரியத்தின் மூலமாகவும் உலகறிய நாட்டி அதை வட மொழிப் பிணிப் பினின்று அடியோடு மீட்பதே. அதற்காகவே அரை நூற்றாண்டு அரும்பாடுபட்டு ஆய்ந்தேன்""

2

"வடமொழி வரலாறும், தலைநாகரிகமும் புகழ் வேண்டி எழுதுபவை அல்ல. தமிழை வடமொழியினின்று மீட்டற்கு எழுதுபவை. இத்துணைக் காலமும் இதே நோக்குடன் கற்றும் ஆராய்ந்தும் இருக்கிறேன்., ஆராய்ச்சி முடிந்துவிட்டது. உண்மையும் கண்டு விட்டேன். இதற்கென்றே கடவுள் என்னை ஏற்படுத்தியிருக்கிறார் என்பது எனது உணர்ச்சி

3

"தமிழை வடமொழியினின்று மீட்பதே என் வாழ்க்கைக் குறிக்கோள். தமிழ் பிராமணியத்திலிருந்து முழுவிடுதலை யடைவதே அதன் பயன். இக்குறிக்கோளை நிறைவேற்றும் பட்டயங்களுள் ஒன்று, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலி. அதை வலியுறுத்துவன இந்தியெதிர்ப்பு நூலொன்றும் வடமொழியெதிர்ப்பு நூலொன்றுமான ஈராவணச் சான்றுகள். அச்சான்றுகளே அகர முதலிவை மெய்ப்பிக்கும்""

"திருவள்ளுவர், பிராமணர் ஏமாற்றை வெளிப்படுத்தித் தமிழ் நாகரிக உயர்வை நாட்டினார். மறைமலையடிகள், தமிழ் தனிமொழியென்று காட்டினார். பெரியார், கல்லாத் தமிழரிடைத் தன்மான உணர்ச்சி ஊட்டினார். நான், தமிழே திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமும் என்று நாட்டிப் பிறமணீயப் 1.திரு.வ.சு. 23-9-72. 2.திரு.வ.சு.25-11-73

3.திரு.வ.சு.6-4-49

4.அ.வா.16-4-81