உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

19

பாவாணர், பிறவி நோக்கை அறிந்து செயலாற்றியதை விளக்கும் சான்றுகள் ஒன்றா இரண்டா? அவர்தம் வாழ்வின் வண்ணமும், வாக்கின் வண்ணமும், படைப்பின் வண்ணமும் எல்லாம் எல்லாம் அவர்தம் நோக்கப் பறையறையும், தொய்விலா முழக்கங்களே! அவர்தம் பிறவி நோக்கை அறிந்தார் -பிறரறியவும் வெளிப்பட அறிவித்தார் -என்பவற்றுக்குச் சான்றுகளும்தாம் எத்துணை?

"தமிழ்நாட்டில் அரசியல் துறையில் தலைமை தாங்கி வழிகாட்ட எங்ஙனம் ஒருவரில்லையோ அங்ஙனமே புலமைத் துறையிலும் இல்லை. தக்கார் ஒருவர் தலையெடுக்கா விட்டால், தமிழ்நாடு, அமிழ்நாடே"

-இது பாவாணரின் நாடு தழுவிய நோக்கு. அந்நோக்குக்கு உரியவராக ஒருவரைக் காணத் தவித்த தவிப்பின் வெளிப்பாடு இது. அத்தவிப்பை நிறைவுறுத்தத் தக்கார் ஒருவரைப் புலமைத் துறையில் தாம் காணாமையால், தம் நோக்கு முனைப்புற்று முந்துதலைத் தம் எழுத்தால் வெளிப்படுத்து கிறார்.

வடமொழியினின்று தமிழை மீட்பதென் வாழ்க்கைக்

குறிக்கோள்”2

"தமிழை வட மொழியினின்று மீட்க வேண்டும் என்னும் குறிக்கோள் கொண்டே நான் கற்றாய்ந்தவன். இதற்கு மிகுந்த நெஞ்சுரமும் தற்சார்பு மனப்பான்மையும் வேண்டும். இவை பிறர்க்கு இல்லை"

66

"தமிழ் திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமும் என்னும் உண்மையை உலகமறிய மேலையறிஞர் ஒப்ப நாட்டவே இறைவன் என்னைப் படைத்திருக்கின்றான்"

374

"என் காலத்தில் தமிழ் விடுதலையடையாவிடின் இனி ஒருகாலும் அடையாதென்பது திண்ணம். தமிழ் விடுதலைக்கும் முன்னேற்றத்திற்கும் அடிப்படையாக நாம் நாட்ட வேண்டிய உண்மை தமிழ் குமரிநாட்டு மொழி என்பதே”

1.திரு.வ.சு.15-7-51. 2.திரு.வ.சு. 31-7-81. 3.திரு.வ.சு. 15-8-71.

4.திரு.வ.சு.17-8-71.

5.திரு.வ.சு.26-7-72.