உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர் உவமைகள்

வானத்து மீனுக்கு வன்தூண்டில்

329

இந்து ஐரோப்பிய மொழிகளின் அடிப்படை தமிழே அவற்றின் கொடுமுடியே சமற்கிருதம். ஆகவே ஐரோப்பிய மொழியமைப்பின் அல்லது வரலாற்றின் திறவுகோல் தமிழிலேயே ஆழப்புதைந்து கிடக்கின்றது. இதைக் கண்டுபிடிக்கும் வரை மேலையர் மொழியாராய்ச்சி யெல்லாம் விழலுக்கு நீரிறைத்தலும் வானத்து மீனுக்கு வன்தூண்டில் இடுதலுமேயாகும்.

தமிழின் தலைமையை நாட்டும் தனிச்சொற்கள்.

கொற்றெருவில் ஊசிவிற்றல்

செ.செ.52.248

சென்ற நூற்றாண்டிறுதியில் ஒலியன்களைக் கண்ட மேலை மொழிநூலார் தமிழருக்கு ஒலியன்களைக், கற்பிக்க வந்தது கொற்றெருவில் ஊசி விற்பதே.

திரைப்பட நடிகையர் உடை

செ.செ. 50:91

வண்ணனை மொழிநூல் புதிதாக வந்ததென்று அதைப் போற்றுவது, திரைப்பட நடிகையர் மேற்கொள்ளும் மானக் கேடான புதிய உடைமுறைகளையெல்லாம் புது நாகரிகக் கோலமென்று புகழ்வதையே ஒக்கும்.

அவலை நினைத்து உரலை இடித்தல்

வ.மொ. நூ. வ. 105

பிறமொழிச் சொற்களையும் பிறமொழி எழுத்துக்களையும் தமிழிற் புகுத்தின், தமிழ் நாளடைவில் மலையாளம் போல் வேறொரு திராவிட மொழியாக மாறிவிடும். அதன் பின் அதைத் தமிழென வழங்குவது அவலை நினைத்துக் கொண்டு உரலை இடிப்பது போன்றதே. ம.வி.236

மகளும் தாயும்

மகள் தாயைப் பெற்றாள் என்னும் முறையில் இயற்றமிழ் வடமொழி வழியதென்றும், இசைத்தமிழ் கருநாடக சங்கீத வழிய தென்றும்,நாடகத் தமிழ் பரத சாத்திர வழியதென்றும் உண்மைக்கு மாறான கருத்துக்கள் உலவியும் ஓரளவு நிலவியும் வருகின்றன.

பழந்தமிழ் இசை. பதிப்புரை